சுகாசினியின் டேலன்ட் சவுத் நிறுவனமும் பரத நாட்டியக் கலைஞர் கிருத்திகாவின் நமார்க்கம் நடன நிறுவனமும் இணைந்து, சென்னையில் ‘அந்தரம்‘ என்ற நடன நிகழ்ச்சியை நடத்துகிறது. வரும் 28ம் தேதி மியூசிக் அகாடமியில் இந்நிகழ்ச்சி நடக்கிறது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திர மாநிலங்களின் பாரம்பரிய கலையான, பரதம், மோகினி ஆட்டம், குச்சிப்பிடி ஆகிய நடனங்கள் இணைந்து, மூன்று தேவதைகளின் கதைகளைச் சொல்லும் முயற்சிதான் அந்தரம். அதன் பொருள் தூரம். கிருத்திகா சுப்ரமணியன் பரத நாட்டியம், கோபிகா வர்மா மோகினி ஆட்டம், யாமினி ரெட்டி குச்சுப்பிடி ஆட்டத்தில் முறையே ஆண்டாள், கண்ணகி மற்றும் வாசவியின் கதைகளை சொல்கிறார்கள். சுஹாசினி மணிரத்னம் நாடக மற்றும் நடன பாணியில் கர்நாடக மாநிலம் பீஜாப்பூரில் உள்ள கோல்கும்பஸ் மசூதியில் அடக்கம் செய்யபட்டு கொண்டாடப்படும் ரம்பா என்ற நடனப்பெண்ணின் கதையை சொல்கிறார். இயக்குனர் ஜெயேந்திராவின் மேற்பார்வையில் இந்நிகழ்ச்சி நடக்கிறது.
0