செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா இந்திய மத்திய அரசு டி.எம்.சவுந்தரராஜனை கவுரவிக்க தபால் தலைஇந்திய மத்திய அரசு டி.எம்.சவுந்தரராஜனை கவுரவிக்க தபால் தலை

இந்திய மத்திய அரசு டி.எம்.சவுந்தரராஜனை கவுரவிக்க தபால் தலைஇந்திய மத்திய அரசு டி.எம்.சவுந்தரராஜனை கவுரவிக்க தபால் தலை

0 minutes read

தமிழ் திரையுலகத்தின் மூத்த இசைமேதையும் பின்னணிப் பாடகருமான டி.எம்.சவுந்தரராஜன் நினைவாக மத்திய அரசு ரூ.5 மதிப்பில் தபால்தலை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இவர், மறைந்த நடிகர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினிகணேசன், நாகேஷ், ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்தியராஜ் என பல கதாநாயகர்களுக்கு தன் சொந்தக்குரலில் கடந்த 40 ஆண்டுகளாக பாடி திரையுலகில் ஆட்சி செய்தவர்.

1950-ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டு வரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 11 இந்திய மொழிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப்பாடல்களும், 3 ஆயிரம் ஆன்மிக பாடல்களும் இவர் பாடி ரசிகர்களை கவர்ந்து உள்ளார்.

அவரை கவுரவிக்கும் வகையில் தற்போது தபால் தலை ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு, அவருடைய குடும்பத்தினர் சார்பிலும், ரசிகர்கள் சார்பில் மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.