சினம்கொள் என்ற ஈழப் பிரச்சினை பற்றிய திரைப்படம், இருபதுக்கு மேற்பட்ட உலக நாடுகளில் ஒரே தடைவையில் வெளியாக உள்ளதாக படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜோசப் தெரிவித்துள்ளார்.
கனடா, பிரித்தானியா, நோர்வே, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற உலக நாடுகளில் ஒரே தடைவையில் சினம்கொள் வெளியாக உள்ளது. ஈழத்து சினிமா முயற்சி வரலாற்றில் இது புதியதொரு பாய்ச்சலாக கருதப்படுகின்றது.
இதேவேளை கடந்த வாரம் சினம்கொள் திரைப்படத்தின் தனிமரம் ஒன்று.. என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அத்துடன் திரைப்படம் குறித்த பெரும் எதிர்பார்ப்பையும் இப் பாடல் ஏற்படுத்தியுள்ளது.
தடுப்பு சிறையிலிருந்து வெளியில் வரும் முன்னாள் விடுதலைப் போராளி ஒருவன் இன்றைய ஈழத்தில் தன் வாழ்வை மீளமைக்க முனையும் போராட்டம்தான் இந்தப் படத்தின் கதை.
அரவிந்த் – நர்வினி நடித்துள்ள இந்த திரைப்படத்தை கனடாவை சேர்ந்த இயக்குனர் ரஞ்சித் ஜோசப் இயக்கியுள்ளார். தமிழகத்தை சேர்ந்த என்.ஆர். ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். படத்தில் வசனம் மற்றும் பாடல்களை ஈழ எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதியுள்ளார்.