கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியன் 2 படத்தில்.

கமல், ஷங்கர் இணைந்துள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல் 90 வயது, இந்தியன் தாத்தாவாக நடிக்கிறார். 85 வயது கதாபாத்திரத்தில் கமலின் தோழியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள். சென்னையில் தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பை வடமாநிலத்தில் முடித்துவிட்டு, தற்போது மீண்டும் சென்னையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது.

அடுத்தகட்டமாக படப்பிடிப்பை சீனாவில் நடத்த படக்குழு திட்டமிட்டிருந்தது. தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால், அங்கு படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பை வேறு நாட்டில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இத்தாலியில் இந்தியன் 2 படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிரியர்