பிக்பாஸ் சாக்‌ஷி அகர்வால் போராளியாக….

பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால். இவர் நடிப்பில் தற்போது ‘புரவி’ என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இருக்கிறது. பிளாக் பீப்பிள் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஜி.ஜே.சத்யா இயக்கும் இப்படம், அதிரடி, அரசியல், திரில்லர் கதையாக உருவாக இருக்கிறது.

இப்படத்தில் சாக்‌ஷி அகர்வால் போராளியாக நடிக்கிறார். இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் சிறப்பாக நடைபெற்றது. சாக்‌ஷியுடன் இணைந்து சம்பத்ராம், காஜல் பசுபவேட்டி, ஷிமோர், சலீமா, தீபா, அம்மன் சுந்தர் ஆகியோருடன் முக்கிய வேடத்தில் ஆரிஃப், ரிஷி சுப்பிரமணியம், லோகேஷ், சந்தோஷ் டேனியல், சுபாஷ் சந்திரபோஸ், பூஷ்மிஹா, இஷ்மத் பானு, நளினி கணேசன், பர்ஷத் நடிக்கிறார்கள்.கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, பி.முகம்மது ஆதிப் இசையமைக்கிறார்.

ஆசிரியர்