அனுஷ்காவுக்கு புகழை தேடி தந்த இயக்குனர்.

தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா. இவர் நடிப்பில் தற்போது நிசப்தம் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படக்குழுவினர் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.

அப்போது நடிகை அனுஷ்காவின் திரைப்பயணம் குறித்து காணொலி ஒன்று ஒளிபரப்பப்பட்டது. மேலும் தொகுப்பாளர் கேட்ட பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கும் நடிகை அனுஷ்கா பதிலளித்தார்.

அப்போது தன்னைப் பற்றி ஒளிபரப்பப்பட்ட வீடியோவில் மறைந்த அருந்ததி பட இயக்குநர் கோடி ராமகிருஷ்ணாவும் இடம்பெற்றிருந்தார். அதைப்பார்த்து உணர்ச்சிவசப்பட்ட நடிகை அனுஷ்கா, இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா இன்னும் சில காலம் நம்முடன் இருந்திருக்கலாம் என்று கூறினார். அவர் பேசிக்கொண்டிருக்கையில் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார்.

பின்னர் உடனிருந்தவர்கள் தண்ணீர் கொடுத்த அனுஷ்காவை சமாதானப் படுத்தினர். கோடி ராமகிருஷ்ணாவை நினைத்து அனுஷ்கா அழுததற்கு காரணம், அவர் இயக்கிய அருந்ததி படம் தான் அனுஷ்காவுக்கு அதிக புகழையும், பரிமாணத்தையும் பெற்றுத் தந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்