பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு வாழ்த்துமழை.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்தவர் லாஸ்லியா. வீட்டில் இருக்கும் போதே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள்.

தற்போது இவர் தமிழ் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் ஃப்ரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் ஆரி அர்ஜுனாவுடன் சேர்ந்து ஒரு படத்திலும் நடிக்கிறார்.

இந்நிலையில் நேற்று தன் பிறந்தநாளை கொண்டாடிய லாஸ்லியாவிற்கு, ஏகப்பட்ட ரசிகர்கள் வாழ்த்துகளை கூறினார்கள். இதுகுறித்து தனது சமூகவலைத்தள பக்கத்தில், ‘என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. என்னை வாழ்த்திய வீடியோ, ஆடியோ, போட்டோக்கள் அனைத்தையும் பார்த்தேன். இப்படி ஒரு அன்பும் வாழ்த்துக்களும் கிடைப்பது இதுவே முதல் வருடம் என்பதில் சந்தோஷமாக இருக்கிறது. மேலும் எனது முந்தைய பிறந்தநாளை விட இது வேறுபட்டது’ என்று கூறியுள்ளார்.

ஆசிரியர்