April 2, 2023 4:01 am

இந்திய திரை உலகில் இன்றொரு மரணம்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

பிரபல நடிகை பரவை முனியம்மா உடல்நல குறைவால் மரணமடைந்து விட்டதாக தகவல் ஒன்று வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் தூள் திரைப்படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமானவர் நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா.

தூள் படத்திற்கு பிறகு பல படங்களில் நடித்தும் பாடியும் உள்ள பரவை முனியம்மா சின்னத்திரையிலும் சமையல் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கினார்.

சமீப காலமாக கிட்னியில் பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில் இவர் இன்று சிகிச்சை பலனின்றி மதுரையில் உயிர் இழந்து விட்டதாக சமூக வளையதளங்களில் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

ஆனால் இது உண்மையில்லை, நான் நேற்று தான் பரவை முனியம்மாவை பார்க்க சென்றிருந்தேன். அவர் நலமுடன் உள்ளார். தேவையில்லாமல் வதந்திகளை பரப்பாதீர்கள் என கேட்டு கொண்டுள்ளார் இளம் நடிகர் அபி சரவணன்.

பரவை முனியம்மாவிற்கு ஒரு மகன் உள்ளார். அவரும் மாற்றுத் திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது. சில தினங்களுக்கு முன்பு என் மறைவிற்கு பிறகு தமிழக அரசு எனக்கு வழங்கும் நிதியுதவியை என் மகனுக்கு வழங்குங்கள் என கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்