ஸ்டார் வார்ஸ் திரைப்பட நடிகர் ஆன்ட்ரு ஜேக், கொரோனா நோய்க்கு உயிரிழந்துள்ளார்.உலகம் முழுவதும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்ட ஸ்டார் வார்ஸ் படத்தின் 7, 8ம் பாகங்களில் நடித்திருந்த ஆன்ட்ரூ ஜேக், 76 வயதான நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, பிரிட்டனின் சூர்ரே (Surrey) பகுதியிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரது மனைவி கேப்ரியேல் ரோஜர்ஸ், ஆஸ்திரேலியா சென்ற நிலையில் அங்கு தனிமைபடுத்தப்பட்டுள்ளார்.
சமூகவலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், எந்தவித வேதனையுமின்றி கணவர் ஜேக்கின் உயிர் அமைதியாக பிரிந்ததாக குறிப்பிட்டுள்ளார்