0
தமிழில் காற்று வெளியிடை , செக்க சிவந்த வானம், சைக்கோ படங்களில் நடித்தவர் அதிதி ராவ் ஹைதரி. பாலிவுட் நடிகையான இவர் தமிழ் , தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
டிவிட்டரில் ரசிகர் ஒருவர், உங்களை பார்த்தால் ஏலியன் போல இருக்கிறீர்கள். ஹீரோயினுக்கான முகம் உங்களுக்கு இல்லை என பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த அதிதி, ‘ அடடா , எப்படி இதை ஊகித்தீர்கள் ? என கேட்டிருக்கிறார். உலகம் முழுவதும் தேடிப் பார்த்து விட்டேன். யாரும் அதைப் போல தோன்றவில்லை. உங்களை பார்த்தால் அப்படி தோன்றியது ‘ என மீண்டும் அந்த நபர் டிவிட் செய்ய, ‘ நீங்கள் சொல்வது எனக்கு ஆச்சரியமாக இல்லை. நீங்கள் சொல்வது போல் கூட இருக்கலாம் ‘ என கூலாக பதில் சொல்லி இருக்கிறார் அதிதி.
வழக்கமாக ரசிகர்கள் இதுபோல் கிண்டல் செய்யும்போது, அதற்கு நடிகைகள் பதிலடி கொடுப்பார்கள். கோபம் அடைவார்கள். ஆனால் அதிதியின் கூல் ரியாக்ஷன் பார்த்து நெட்டிசன்கள் பலரும் அவரை பாராட்டியுள்ளனர்.