பாலிவுட் நடிகர் சிஷாந்த் போல ஒதுக்கப்பட்டவர்கள் அஜித்தை நினைத்து பாருங்கள் என்று காஸ்டியும் டிசைனரான வாசுகி பாஸ்கர் கூறியுள்ளார்.
சமீபத்தில் பாலிவுட் நடிகரான சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டது இந்தியா அளவில் மொத்த சினிமா திரையுலகினரையுமே அதிர்ச்சியடைய செய்தது என்று கூறலாம். அவர் இறப்பிற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் வந்த சுஷாந்தை பாலிவுட் திரையுலகினர் ஒதுக்கினர் எனவும், அதனால் அவர் பல அவமானங்களை சந்தித்தார் எனவும், அந்த டிப்ரஷன்தான் அவர் உயிரை காவு வாங்கியுள்ளது எனவும் தகவல்கள் பரவி வருகிறது.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் காஸ்டியும் டிசைனரான வாசுகி பாஸ்கர் இது பற்றி ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ‘தமிழ் சினிமாவிலும் ஒதுக்கப்படும் பல சுஷாந்த் உள்ளனர். சிலர் என்னிடம் வருத்தப்படுவார்கள், சிலர் அமைதியாக சிரித்து கொண்டே புறக்கணிப்பின் வலியை கடப்பார்கள். அவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்கிறேன், அவ்வப்போது தல அஜித் பட்ட போராட்டங்களை நினையுங்கள்’ என அஜித் ஆரம்ப காலத்தில் ஒதுக்கப்பட்டதை குறிப்பிட்டு கூறியுள்ளார்.
எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சினிமாவில் நுழைந்த அஜித்தின் ஆரம்பகால சினிமா வாழ்க்கை மிகப்பெரிய சோதனையாகவே இருந்தது. பல அவமானங்கள், துரோகங்கள், தோல்விகள் இப்படி எல்லாவற்றையும், தன்னுடைய தன்னம்பிக்கை, விடா முயற்சி, கடின உழைப்பு இவற்றால் அடித்து நொறுக்கி, இன்று தமிழ் சினிமாவின் கிங் ஆஃப் பாக்ஸ் ஆஃபிஸ் என்று அழைக்கப்படும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.
இந்த தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.