கைவிடப்பட்டதா சூர்யாவின் அருவா?

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த அருவா படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

கைவிடப்பட்டதா சூர்யாவின் அருவா?

சூர்யா-ஹரி கூட்டணி, தமிழ் சினிமாவில் பல்வேறு கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்துள்ளனர். இவர்களது கூட்டணியில் வெளியான ஆறு, வேல், சிங்கம் பட வரிசைகள் என அனைத்தும் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் பார்த்தன.

இதனிடையே ஹரியும் சூர்யாவும் ‘அருவா’ படத்தின் மூலம் மீண்டும் இணைய உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. கே.இ.ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஒரே கட்டமாக ஷூட்டிங்கை முடித்து படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டு இருந்தனர்.

சூர்யா, ஹரி

தற்போது நிலவி வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பை திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை. இந்நிலையில், அருவா படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு வந்த பின் சூர்யா, வெற்றி மாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம்.

இதையடுத்து பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளாராம். இதனால் அருவா படம் கைவிடப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் படக்குழுவினர் தரப்பில் இதுகுறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.

ஆசிரியர்