அவெஞ்சஸ் படத்தின் சூப்பர் ஹீரோ மரணம்

ஹாலிவுட் திரையுலகில் சூப்பர் ஹீரோ படங்களுக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் பலம் இருக்கும். அதிலும் மார்வல் காமிக்ஸ் படங்களுக்கு என்றால் சொல்லவா வேண்டும்.

உலக அளவில் அதிகம் வசூல் செய்த படம் என்றால் அது மார்வலின் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் தான்.

இப்படம் உலகம் முழுவதும் 2.5 பில்லியன் வசூல் செய்து சாதனை படைத்தது, இந்த அவெஞ்சர்ஸ் குழுவில் மிக முக்கியமான சூப்பர் ஹீரோ ப்ளாக் பேந்தர்.

வக்காண்டா என்ற ஊரின் அரசன் தான் ப்ளாக் பேந்தர், அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் படத்தின் கிளைமேக்ஸ் இந்த இடத்தில் தான் நடக்கும், இங்கு வந்து தான் தானோஸ் உலகத்தை அழிப்பான்.

மேலும், ப்ளாக் பேந்தர் சோலோவாகவும் ஒரு படமாக எடுக்கப்பட்டது, அந்த படம் தான் மார்வல் சோலோ ஹீரோ படங்களில் அதிகம் வசூல் செய்த படம்.

இப்படத்தின் நாயகனாக சாட்விக் போஸ்மேன் அவர்கள் கேன்சரால் பாதிக்கப்பட்டு இன்று இறந்துள்ளார்.

இவருக்கு வயது 43 தான், இந்த செய்தியை அறிந்த அனைவருக்கும் குறிப்பாக சூப்பர் ஹீரோ ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ஆசிரியர்