வடிவேல் பாலாஜியின் மகளின் செயலால் கண்ணீர் வெள்ளத்தில் மக்கள்

பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேல் பாலாஜி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இன்று மரணமடைந்தார்.

மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜிக்கு மனைவி மற்றும் பள்ளிக்கூடம் செல்லும் ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

வடிவேல் பாலாஜியின் உடல் எம்எஸ் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அப்போது அவரது மனைவியும் மகளும் கதறி அழுதனர். குறிப்பாக அவரது மகள் டாடி எந்திரிங்க டாடி என்றும் கண்ண திறங்க டாடி என்றும் கதறியது அங்கு கூடியிருந்த அனைவரின் கண்களையும் குளமாக்கியது.

வடிவேல் பாலாஜியின் உடல் வைக்கப்பட்டிருந்த ஃபிரீஸர் பாக்ஸை தட்டி தட்டி தனது அப்பாவை எழுப்ப முயன்றார்.

அந்த காட்சிகள் பலரின் இதயத்தையும் ஒரு கணம் கனக்கச் செய்துவிட்டது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இதேவேளை, வடிவேல் பாலாஜியின் இறுதிச் சடங்குகள் நாளை காலை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிரியர்