உங்கள் இருவருக்கும் போட்டி இருக்க வேண்டும் | திரிஷா

  • ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
  • இப்படத்தின் புதிய வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின்செல்வன்”. இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்பட முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.

பொன்னியின் செல்வன்

இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் அதிகப்படுத்தியுள்ளது. மேலும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து படக்குழுவினர் தீவிரமாக புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் குந்தவை மற்றும் பூங்குழலி கதாபாத்திரம் குறித்து படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நடிகை திரிஷா கூறியதாவது, “முதல் நாள் படப்பிடிப்பில் நான் மிகவும் பதற்றத்துடன் இருந்தேன். படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் கதாபாத்திரங்களாகவே இருந்தோம். ஐஸ்வர்யா ராய், திரிஷாவாக இல்லாமல் குந்தவை மற்றும் நந்தினியாகவே இருந்தோம்.

பொன்னியின் செல்வன்

நானும் ஐஸ்வர்யாவும் பேசினால் மணி சார் கூறுவார் நந்தினியும் குந்தவையும் நண்பர்களாக இருக்க முடியாது. அதனால் அதிகம் பேசாதீர்கள். என் கதாபாத்திரத்திற்காகவாது உங்கள் இருவருக்கும் இடையில் சிறிய போட்டி இருக்க வேண்டும் என கூறுவார்” என்று ஜாலியாக தெரிவித்தார்.

ஆசிரியர்