இளமாறன் இசையில் சுவிகரன் இயக்கத்தில் “ஆர்கலி” பாடல் – டீசர் வெளியீடு

i production ஜொனி தயாரிப்பில் இளமாறன் இசையில் சுவிகரன் Msk இயக்கத்தில் உருவாகிவரும் பாடல் “ஆர்கலி”.

காணொளிப்பாடலாக வெளிவரும் இந்தப்பாடலுக்கான ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் வர்ணச்சேர்க்கை பணிகளை கதிர் கவனித்துள்ளார்.

சுவிகரன் திரைக்கதை எழுதி இயக்கியுள்ள இந்தப்பாடலில் சுவிகரனுடன் டில்கி திசாநாயகே, மிமிக்ரி ஆதி, குட்டிப்பொன்னு ஷாஜா மற்றும் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஆர்கலி பாடலின் உதவி இயக்குனர்களாக வினோத் மற்றும் விக்டோரியாவும், கலை இயக்குனராக ஜெனிஸ்டனும், ஒப்பனைக் கலைஞராக டாரியனும், உதவி ஒளிப்பதிவாளராக கெமலும் பணிபுரிந்துள்ளனர்.

மேலும் தயாரிப்பு முகாமை ஷரோன், தயாரிப்பு உதவி நல்லையா கஜீபன், உடை அலங்காரம் ஜெனிபர் மற்றும் அபிஷா.

இந்தப்பாடலை கனடா தமிழ் பசங்க தங்கள் யு-ரியூப் பக்கத்தில் வெளியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்