March 31, 2023 8:09 am

சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் ‘இராவண கோட்டம்’ முதல் பாடல் வெளியீடு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

நடிகர் சாந்தனு பாக்யராஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘இராவண கோட்டம்’ படத்தில் இடம்பெற்ற ‘அத்தன பேர் மத்தியிலே..’ எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து அவர்களது இணைய பக்கத்தில் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார்கள். இந்த பாடலுடன் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது.

‘மதயானைக் கூட்டம்’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘இராவண கோட்டம்’.

இதில் சாந்தனு பாக்யராஜ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஆனந்தி நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் பிரபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரித்து வெளியிடுகிறார்.

இந்த படத்தில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ‘அத்தன பேர் மத்தியிலே..’ எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா எழுத பின்னணி பாடகர் யாசின் நிசார் மற்றும் பாடகி வந்தனா சீனிவாசன் ஆகியோர் பாடியிருக்கிறார்கள். கிராமத்து பின்னணியிலான யதார்த்தமான காதலை மெல்லிசையாக வழங்கி இருக்கும் இந்தப் பாடல் இளைய தலைமுறை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்