March 31, 2023 8:04 am

‘சப்தம்’ படக் குழுவுடன் இணைந்த சிம்ரன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

நடிகர் ஆதி கதையின் நாயகனாக நடித்து வரும் ‘சப்தம்’ எனும் திரைப்படத்தில் நடிகை சிம்ரன் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘சப்தம்’. இதில் நடிகர் ஆதி கதையின் நாயகனாக நடிக்கிறார்.

இவருடன் நடிகைகள் லட்சுமி மேனன், லைலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். இப்படத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்று, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.

இந்நிலையில் இப்படத்தில் நட்சத்திர நடிகர்களின் பட்டியலில் மூத்த நடிகை சிம்ரன் இணைந்திருக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருக்கிறார்கள். அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார்.

ஹாரர் திரில்லர் தயாராகும் இந்த திரைப்படத்தை 7ஜி பிலிம்ஸ் சிவா மற்றும் ஆல்பா பிரேம்ஸ் அறிவழகன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இதனிடையே நடிகை சிம்ரன் கடந்த ஆண்டில் வெளியான சீயான் விக்ரமின் ‘மகான்’, மாதவனின் ‘ராக்கெட்ரி- தி நம்பி எஃபெக்ட்’, ஆர்யாவின் ‘கேப்டன்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார் என்பதும், விரைவில் வெளியாகவிருக்கும் பிரசாந்தின் ‘அந்தகன்’, சீயான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்