December 9, 2023 11:49 pm

தளபதி விஜயின் ‘லியோ’ பட டிரெய்லர் அப்டேட்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் தளபதி விஜயின் ‘லியோ’ படத்தின் முன்னோட்டம் வெளியாகும் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய  திரைப்படம் ‘லியோ’. இப்படத்தில் விஜய், திரிஷா, பொலிவுட் நடிகர் சஞ்சய் தத்,  அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.‌ மனோஜ் பரஹம்சா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். பிரம்மாண்டமான எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் எஸ் லலித்குமார் தயாரித்திருக்கிறார்.

இத் திரைப்படத்தின் முன்னோட்டம் எதிர்வரும் ஆறாம் திகதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், சிங்கிள் ட்ராக், இரண்டாவது பாடல் ஆகிய வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தில் முன்னோட்டம் வெளியாகிறது. இரண்டு நிமிடம் கால அவகாசம் உள்ள அந்த முன்னோட்டத்தில் விஜயின் அதிரடி எக்சன் காட்சிகளும், முத்தாய்ப்பான வசனங்களும் இடம்பெற்றிருப்பதாக படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

இதனிடையே ‘லியோ’ படத்தின் இசை வெளியீடு எதிர்பாராத காரணத்தால் ரத்து செய்யப்பட்டதால் படத்தின் முன்னோட்டத்தை திடீரென்று படக் குழு ஆறாம் திகதியன்று வெளியாகும் என அறிவித்திருக்கிறது.‌ தற்போதுள்ள சூழலில் தளபதி விஜயின் ‘லியோ’ இந்தியா முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் திட்டமிட்டபடி பட மாளிகைகளில் வெளியானாலும்… தமிழகத்தில் மட்டும் முழுமையாக வெளியாகுமா..? என்ற இழுப்பறி நிலை நீடிப்பதாக திரையுலக வணிகர்கள் கவலையுடன் தெரிவிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்