December 10, 2023 5:53 pm

பிருத்விராஜ் சுகுமாறனின் பிறந்த நாளை பிரத்யேகமாக கொண்டாடிய ‘சலார்’ படக் குழு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் ‘சலார்’ படத்தில் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் நடிகர் பிருத்விராஜ் சுகுமாறனின் கதாபாத்திரப் பெயரை வெளியிட்டு, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, பிரத்யேக போஸ்டரை படக் குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

நட்சத்திர இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘சலார்- பார்ட் 1 சீஸ்ஃபயர்’. இதில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி, ராமச்சந்திர ராஜு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இவர்களுடன் மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரும், இயக்குநருமான பிருத்விராஜ் சுகுமாறன் அழுத்தமான வேடத்தில் நடிக்கிறார். அவர் வரதராஜ மன்னார் எனும் கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக் குழுவினர் அவரது பிறந்த நாளன்று பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருக்கிறார்கள்.

புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்