December 2, 2023 5:50 pm

சிவகார்த்திகேயனுடன் இணைவாரா வடிவேலு?

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் அவரது அடுத்தடுத்த திரைப்படங்கள் ஏறுமுகமாகத்தான் இருக்கின்றன.

சிவகார்த்திகேயனின் 21வது படத்தை கமல்ஹாசன் தயாரிக்க, ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதில், முதன்முறையாக சிவகார்த்திகேயனுடன் சாய்பல்லவி ஜோடி சேர்கிறார்.

இதையடுத்து, தனது 22வது படத்துக்காக ஏ.ஆர்.முருகதாஸுடன் இணையவிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இதேவேளை, சிவகார்த்திகேயனின் நடிப்பில், நீண்டகாலமாகத் தயாரிக்கப்பட்டு வந்த ‘அயலான்’ திரைப்படம் அடுத்த வருடம்பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது.

தலைப்பின்படி, சிவகார்த்திகேயனுக்கு இணையாக, ஒரு வேற்றுலகவாசியின் கதாபாத்திரமும் படத்தில் முக்கிய இடம் பெற்றிருக்கிறது.

ரவிகுமாரின் இயக்கத்தில் தயாராகிவரும் அயலானின் படப்பிடிப்புப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், பிந்திய தயாரிப்பு வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெறுகின்றன.

இந்த நிலையில்தான், படத்துக்கு கூடுதல் பலம் சேர்ப்பதற்கு, வேற்றுலகவாசிக்குக் குரல் கொடுப்பதற்கு வைகைப்புயல் வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருக்கின்றனர்.

ஒருவேளை, வடிவேலு சம்மதம் தெரிவித்துவிட்டால், இந்தப் படம் நிச்சயமாக சிவகார்த்திகேயனுக்கு ஒரு திருப்புமுனை படமாக அமையும்.

ஏ.ஆர்.ரஹ்மான் முதன்முறையாக அயலானுக்காக சிவகார்த்திகேயனுடன் இணைகிறார். ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகிபாபு, இஷா கோபிகர், பானுப்பிரியா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் அயலானில் நடித்துள்ளனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்