September 21, 2023 12:57 pm

பாலக்கீரை முட்டை புர்ஜி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தேவையான பொருட்கள்:

பாலக்கீரை – 2 கப்

முட்டை -3

பெரிய வெங்காயம் – 1

தக்காளி – 1

கறிவேப்பில்லை – 1 கொத்து

பச்சைமிளகாய் – 1

மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

மிளகாய் தூள் – 1/2 – 3/4 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 2 தேக்கரண்டி

கடுகு – தாளிக்க

செய்முறை :

பாலக்கீரையை நீரில் சுத்தமாக அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும் .

வெங்காயம் , தக்காளி, கறிவேப்பிலை, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.

ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்த பின்னர் பச்சை மிளகாய் , கறிவேப்பில்லை, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி குழைய வதங்கியவுடன் நறுக்கிய பாலக்கீரை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 5 நிமிடம் வரை மிதமான தீயில் வதக்கவும்.

கீரை வதங்கியவுடன் கலக்கி வைத்துள்ள முட்டை சேர்த்து அதனுடன் மிளகாய் தூள் மற்றும் முட்டைக்குத் தேவையான உப்பு சேர்த்து வறுக்கவும்.(உப்பு சேர்க்கும் பொழுது கவனம் தேவை ஏனெனில் ஏற்கனவே கீரைக்கு சேர்த்துள்ளோம் அதை நினைவில் கொள்ளவும்). முட்டை பச்சை வாசனை போய் வாணலியில் ஒட்டாமல் வரும் வரை வதக்கினால் பாலக் முட்டை புர்ஜி தயார் .

சுவையான பாலக் முட்டை புர்ஜி தயார் !!!!

நன்றி | மாலை மலர்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்