குடைமிளகாய் பன்னீர் மசாலா

தேவையான பொருட்கள்

பன்னீர் – 200 கிராம் நறுக்கியது
குடைமிளகாய் – 1 நறுக்கியது
வேகவைத்த பட்டாணி – 50 கிராம்
வெங்காயம் – 2 பொடியாக நறுக்கியது
தக்காளி – 1 நறுக்கியது
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
சப்ஜி மசாலா தூள் – 1 தேக்கரண்டி
கசூரி மேத்தி – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
பட்டை – 1
கிராம்பு – 2
ஏலக்காய் – 1
பிரியாணி இலை – 1

செய்முறை:

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்க்கவும்.
  2. பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும், வெங்காயம் பாதி வதங்கியதும் அதில் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் பொன்னிறமானதும் அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  4. பிறகு வேகவைத்த பட்டாணி சேர்த்து வதக்கவும்.
  5. அடுத்து உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சப்ஜி மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
  6. பிறகு நறுக்கிய பன்னீரை சேர்த்து வதக்கவும்.
  7. கடைசியாக கசூரி மேத்தி சேர்த்து கலந்து இறக்கவும்.
  8. குடைமிளகாய் பன்னீர் தயார்!

ஆசிரியர்