பிரட் சில்லி

சுவைப்போம் மகிழ்வோம்

பிரட் சில்லி என்றது பெரிதாக எதுவும் தேவையில்லை அதை போல் பாணில் செய்யும் உணவுகள் எளிதில் எண்ணெய் ஊறும் தன்மை அதிகமாக இருக்கும் ஆனால் இதன் தன்மை சிறுது வேறுபட்டதாக இருக்கும்

தேவையான பொருட்கள்

பாண் 5 சிலஸ்

கோவா -1/4

கரட் -1

பச்சை மிளகாய் 3

பெரிய வெங்காயம் -1

பூண்டு -5

சோயா சோஸ் 1/2 தேக்கரண்டி

தக்காளி சோஸ் -1 1/2 தேக்கரண்டி

மிளகாய் சோஸ் -11/2 தேக்கரண்டி

தேவையான உப்பு

கோதுமை 5 கரண்டி

சோளம் மா 5 கரண்டி

மிளகாய் தூள் சிறிதளவு

எண்ணெய்

செய்முறை

முதலில் ஐந்து சிலஸ் பாணை சிறிதளவு தண்ணீர் தெளித்து மசித்து எடுக்கவும் கோவா, கரட் , மிளகாய் முட்டை பொறிப்பதற்கு வெட்டுவது போல் வெட்டி கொள்க.

இப்போது பண்ணுடன் வெட்டி வைத்தவரை கலந்து உருண்டை பிடிப்பதற்கு ஏற்ற போல் பிசைந்து எடுக்க வேண்டும்.

பின் அவற்றை சிறிய கட்லட் உருண்டைகள் போல உருட்டி எடுக்க வேண்டும் .

கோதுமை , சோளமா மிளகாய் தூள் ஆகியவற்றை நீர் விட்டு கரைத்து எடுக்க வேண்டும்.

பின் மாவில் உருண்டையை நன்கு தோய்த்து மாவில் பொறித்து எண்ணெய் வடிய விடவேண்டும்.

பின் வெங்காயம் ,பூண்டு ,மிளகாய் ஆகியவற்றை வெட்டி தாளிப்பது போல எண்ணையில் விட்டு பொறித்து பின் சோயா சோஸ் , தக்காளி சோஸ் , மிளகாய் சோஸ் ஆகியவற்றை இட்டு அதில் பாண் உருண்டை பொறியல்களை ஒரு கிளறல் கிளறி பரிமாறலாம்.

– N.DILZKA –

.

ஆசிரியர்