உலகளாவியரீதியில் மிக விமரிசையாக கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று கிறிஸ்மஸ் ஆகும். மேலத்தேய நாடுகளில் இனமத வேறுபாடின்றி கிறிஸ்மஸ் பண்டிகையை சிறியோரிலிருந்து பெரியோர்வரை குதூகலத்துடன் வரவேற்கின்றனர்.
கிறிஸ்மஸ் என்றாலே எல்லோர் நினைவுகளிலும் வருவது கிறிஸ்மஸ் மரம். எல்லோர் வீடுகளிலும் வியாபாரநிலையங்களிலும் அலுவலகங்களிலும் கிறிஸ்மஸ் மரங்களை பல வண்ண விளக்குகளாலும் பல வடிவமான அலங்காரப் பொருட்களாலும் அலங்கரித்து மகிழ்வார்கள்.
அலங்கரிப்பதில் நீங்களும் புதிய சிக்கனமான அலங்காரத்தை கையாண்டுதான் பாருங்களேன். இன்று சீடிகள் இல்லாத வீடுகளே இல்லை. பயன்படாத பழைய சீடிக்களை பயன்படுத்தி விதம்விதமான கிறிஸ்மஸ் அலங்காரத்திற்கான ஒரு சில அழகிய ஆலோசனைகள் உங்களிற்காக…..