செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் வயதானாலும் இளமையை தக்க வைத்துக் கொள்ளலாம் இப்படி! வயதானாலும் இளமையை தக்க வைத்துக் கொள்ளலாம் இப்படி!

வயதானாலும் இளமையை தக்க வைத்துக் கொள்ளலாம் இப்படி! வயதானாலும் இளமையை தக்க வைத்துக் கொள்ளலாம் இப்படி!

1 minutes read

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். நம் மனதைப் புத்துணர்வுடன் வைத்துக் கொள்ளும் போது தான் முகம் பொலிவுற்று புறத்தோற்றத்திலும்  அழகுடன் இருக்க முடியும். வயதானாலும்  இளமையைத் தக்க வைத்துக் கொள்ள அகம் புறம் இரண்டுக்குமான டிப்ஸ்களை தருகிறார் அழகுகலை நிபுணர் ராதிகா.

ஆரோக்கிய உணவு!
அழகு என்றதும் முகப்பொலிவுக்கும் நிறத்துக்குமே முக்கியம் கொடுத்து முகப்பூச்சுக்கு  மட்டுமே தயாராகிக் கொண்டிருப்போம். அப்படி இல்லாமல் வைட்டமின் சத்துகள் நிறைந்த காய்கறிகள், பழங்கள், சத்தான தானியங்களை எடுத்துக் கொள்வது நல்லது. சுத்தமான நீரை தேவையான அளவுக்குப் பருக வேண்டும்.

உடல் எடை கவனம்!
ஆரோக்கிய உணவு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு சரிவிகித உணவும் அவசியம். உடல் எடையை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க தேவையற்ற துரித உணவுகளை தவிர்ப்பதுடன், சீரான உடற்பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க முடியும்.

மன நலம் காப்போம்!
தேவையற்ற மன அழுத்தத்தால் உடல் பொலிவை இழக்க நேரிடும். பார்லர்களில் இதற்கென உடல் மசாஜ்கள் செய்யப்படுகின்றன. பார்லர்களில் செல்ல விரும்பாதவர்கள் வாரம் ஒருமுறை வீட்டிலேயே மசாஜ் செய்து எண்ணெய் குளியல் செய்து கொள்ளலாம். தினமும் காலையிலும் மாலையிலும் மெடிடேஷன் என்று சொல்லக் கூடிய தியானப் பயிற்சி மனதைப் புத்துணர்வுடன் வைத்திருக்கும். மனம் ஆரோக்கியமாக இருந்தால் தான் வெளித்தோற்றமும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

உருளைக் கிழங்குஇளமையைபுதினா

முகப்பூச்சுக்கு இதெல்லாம்!

* உருளைக்கிழங்கின் சாறு எடுத்து உறங்குவதற்கு முன்பு முகத்தில் தடவி,15  நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். கருவளையங்கள் நீங்குவதுடன் நல்ல தூக்கம் கிடைக்கும்.

* தினமும் குளிப்பதற்கு 20 நிமிடங்கள் முன்பு பாதாம் ஆயிலை முகத்தில் தடவி குளித்து வர, நாளைடைவில் முகம் பொலிவு பெறும்.

*  புதினா இலையை அரைத்து சாறு எடுத்து கடலை மாவுடன் சேர்த்து பேஸ்ட் ஆக்கி, முகத்தில் `பேக்’ போட்டு, 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி வர, முகத்தில் உள்ள மாசு நீங்கி `பளிச்’ அழகு கிடைக்கும்.

* வாழைப்பழம், இரண்டு டீஸ்பூன் தேங்காய்ப் பால், ஒரு டீஸ்பூன் வெள்ளரிச் சாறு சேர்த்து குழைத்துப் பூச கன்னம் பொலிவுறும்.

* கற்றாழை ஜெல்லுடன் தேன் கலந்து பூசி வர முகச் சுருக்கம் நீங்குவதுடன் முகம் பொலிவுறும். இதை கைகளுக்கும் பூசிக் கொள்ளலாம்.

முக அழகுக்கு முக்கியம் தருவது போலவே தலைமுடி பராமரிப்பும் அவசியம். அதனால் மாதம் ஒரு ஸ்பா செய்து கொள்ளலாம்.

அதிக அளவில் மேக்கப் செய்து கொள்ளாமல், உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தாத காஸ்மெட்டிக் பொருட்களை மட்டும் பயன்படுத்தும் போது உடல் சுருக்கம் மூலம் இளவயதில் ஏற்படும் முதிர்ச்சியான தோற்றத்தை தவிர்க்கலாம்.

 

நன்றி : ஆனந்த விகடன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.