Wednesday, April 14, 2021

இதையும் படிங்க

அழகுசாதன பொருட்களால் ஆபத்து

கருவுற்றிற்கும் பெண்கள் கவனத்திற்கு: இன்றைய வணிக உலகம் எல்லோரையும் அமிலக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறதோ என்று தோன்றுகிறது. புற்றிலுள்ள ஈசல்...

ஐஸ் கட்டியை கொண்டு முகத்திற்கு மசாஜ் செய்ய உதவும் அழகு குறிப்புகள்

சருமத்தில் அதிக எண்ணெய் பசையுள்ளவர்கள் ஐஸ் க்யூபை கொண்டு முகத்திற்கு மசாஜ் செய்து வர எண்ணெய் சுரப்பது குறையும். மேலும் சருமத்தில் வேறு...

நகங்களின் அழகை பராமரிக்க உதவும் சில வழிமுறைகள்

நகங்களில் நகசுத்தி, சோற்றுப்புண், நகங்கள் உடைவது போன்றவை தடுக்கப்பட வேண்டுமானால் அதிக நேரம் தண்ணீர் அல்லது டிடர்ஜென்ட் தண்ணீரில் கை, கால்களை வைப்பதை...

முடி வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் என்ன..

பொதுவாகவே புரோட்டீன் பற்றாக்குறை, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, சத்துக்கள் தேவையான அளவு உடலில் இல்லை என்றால் முடியின் வளர்ச்சி...

உதட்டில் ஏற்பட்ட கருமையை நீக்க சில இயற்கை குறிப்புகள்!

உதடுகளும் ஒருவரின் அழகை வெளிக்காட்டும். அதனால் தான் பெண்கள் அழகை அதிகரித்துக் காட்ட மேக்கப் போடும் போது உதடுகளுக்கு லிப்ஸ்டிக்குகளைப் போடுகிறார்கள். ஆனால்...

பெண்களே கோபம் வராமல் தடுக்க வழிமுறைகள்!

கணவனின் கோமாளித்தனத்தை மனைவி மறந்தால் தான் இல்லறம் நல்லறமாகும். அதே போல் மனைவியின் முட்டாள் தனத்தை மறந்தால் தான் அங்கு அன்பு துளிர்க்க...

ஆசிரியர்

மன அழுத்தம், மலட்டுத்தன்மை, முடி உதிர்வு | பிரச்னைகள் தீர்க்கும் மூன்று நிமிட முத்திரைகள்!

உடல், மன ஆரோக்கியம் அனைவருக் கும் அவசியம். ஆனால், வீடு, வேலை என றெக்கை கட்டிப் பறந்துகொண்டிருக்கும் பல பெண்களுக்கும், தங்கள் உடல், மன ஆரோக்கியத்துக்கு அரை மணி நேரம்கூட செலவழிக்க முடிவதில்லை. அப்படிப் பட்டவர்களுக்கானவைதான் முத்திரைகள்.பெண்களுக்கு வரக்கூடிய பிரச்னைகளுக் கான பிரத்யேக முத்திரைகளை எப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்லித் தருகிறார் யோகக்கலை நிபுணர் பெ.கிருஷ்ணன் பாலாஜி.

கிருஷ்ணன் பாலாஜி.
கிருஷ்ணன் பாலாஜி.

‘`நம் உடலானது பல கோடி செல்களால் ஆனது. ஒவ்வொரு செல்லுக்கும் பஞ்சபூத தன்மை இருக்கிறது. நம் விரல் நுனிகள் பஞ்சபூதங்களைக் கட்டுப்படுத்துகின்றன. பெருவிரல் நெருப்பையும், சுண்டு விரல் நீரையும், மோதிர விரல் நிலத்தையும், நடுவிரல் ஆகாயத்தையும், ஆள்காட்டி விரல் காற்றையும் கட்டுப்படுத்துகின்றன. விரல் நுனிகளை இணைக்கும்போது பஞ்சபூதங்கள் இணைந்து, உடலில் ஏற்பட்ட மாறுபாடு களைச் சரி செய்து, உடல் உள்ளுறுப்புகளையும் பலமாக்குகின்றன. சாப்பிடுவதற்கு முன்னால், தினமும் மூன்று வேளைகள் முத்திரை பயிற்சிகளைச் செய்ய வேண்டும். மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரை செய்ய வேண்டும். காலை மற்றும் மதியம் கிழக்கு நோக்கி அமர்ந்தும், மாலையில் மேற்கு நோக்கி அமர்ந்தும் செய்ய வேண்டும். தரை விரிப்பின்மீது சப்பணமிட்டு அமர்ந்துதான் முத்திரைகள் செய்ய வேண்டும். தரையில் அமர முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்தும் செய்யலாம். உட்காரும்போது முது கெலும்பு நேராக இருக்க வேண்டும். முத்திரை செய்வதற்கு முன் 20 நொடிகள் இயல்பான மூச்சோட்டத்தில் உட்கார்ந்திருக்க வேண்டும்” என்கிறார்.

மன அழுத்தம், மலட்டுத்தன்மை, முடி உதிர்வு... பிரச்னைகள் தீர்க்கும் மூன்று நிமிட முத்திரைகள்!

குழந்தைப்பேற்றுக்கு ஆதி முத்திரை

குழந்தைப்பேறு என்பது உடலும் மனமும் சார்ந்த விஷயம். இரண்டும் சாந்த மாக இருந்தால்தான் சுரப்பிகள் நன்றாக இயங்கும். டென்ஷனும் டிப்ரெஷனும் கர்ப்பப்பையில் பிராண ஆற்றலைக் குறைக்கும். இதைச் சரிசெய்ய ஆதி முத்திரை செய்ய வேண்டும். பிறந்த குழந்தைகள் கட்டை விரலை உள்ளுக்குள் வைத்து நான்கு விரல்களால் மூடிக் கொண்டிருக்கும் இல்லையா? அதுதான் ஆதி முத்திரை. இந்த முத்திரை செய்யும் காலத்தில் உலர்ந்த திராட்சை, பேரீச்சை, முருங்கைக்கீரை, கருஞ்சீரகம், தேன் போன்ற வற்றைச் சாப்பிட வேண்டும்.

மன அழுத்தம், மலட்டுத்தன்மை, முடி உதிர்வு... பிரச்னைகள் தீர்க்கும் மூன்று நிமிட முத்திரைகள்!

முடி உதிர்தலைத் தடுக்கும் பிரசன்ன முத்திரை

உடலில் உஷ்ணத்தன்மை சரியாக இருந்தால் முடி உதிராது. இளநரையும் வராது. இதற்கு உதவுவது பிரசன்ன முத்திரை. சுண்டு விரல், மோதிரவிரல், நடுவிரல், ஆள்காட்டிவிரல் நான்கையும் நகங்கள் படுவது போல வைக்க வேண்டும். கட்டைவிரல் இரண்டும் இதயத்தைப் பார்த்தபடி இருக்க வேண்டும்.

மன அழுத்தம், மலட்டுத்தன்மை, முடி உதிர்வு... பிரச்னைகள் தீர்க்கும் மூன்று நிமிட முத்திரைகள்!
மன அழுத்தம், மலட்டுத்தன்மை, முடி உதிர்வு... பிரச்னைகள் தீர்க்கும் மூன்று நிமிட முத்திரைகள்!

கருமுட்டைகள் உருவாக சஹக சங்கு முத்திரை

கர்ப்பப்பையில் பிராண ஓட்டம் சரியாக இல்லை யென்றால் கருமுட்டைகள் உருவாகாத தன்மை, அப்படியே உருவானாலும் கரு தங்காத நிலை இருக்கும். இதை சஹக சங்கு முத்திரை சரிசெய்யும். கைவிரல்களை ஒன்றாகக் கோத்துக்கொண்டு பெருவிரல்கள் மட்டும் நேராக இருக்க வேண்டும். கருமுட்டைகள் உருவாகவும் மன அமைதிக்கும் உதவும் இந்த முத்திரை.

மன அழுத்தம், மலட்டுத்தன்மை, முடி உதிர்வு... பிரச்னைகள் தீர்க்கும் மூன்று நிமிட முத்திரைகள்!

பேறுகால நீரிழிவுக்கு வருண முத்திரை

கர்ப்பமாக இருக்கும்போதும் குழந்தை பிறந்த பிறகும் நீரிழிவு வராமல் இருக்க வருண முத்திரை செய்ய வேண்டும். சுண்டுவிரல், பெருவிரல் நுனி இணைந் திருக்க, மற்ற மூன்று விரல்கள் தரை நோக்கி இருக்க வேண்டும். இந்த முத்திரை யால் கணையம் நன்கு இயங்கும். அதனால் நீரிழிவு வராமல் தடுக்கலாம். வந்தால் கட்டுப்படுத்தலாம். வருண முத்திரை உடலில் நீரின் தன்மையைச் சமமாக்குவதால் உடல் மற்றும் முகத்தில் இருக் கிற சுருக்கங்கள் சரியாகும்.

மன அழுத்தம், மலட்டுத்தன்மை, முடி உதிர்வு... பிரச்னைகள் தீர்க்கும் மூன்று நிமிட முத்திரைகள்!

முதுகுவலி போக்கும் அனுசாசன முத்திரை

கழுத்து முதுகுவலி, நடு முதுகுவலி, அடி முதுகுவலி என முதுகுவலியை மூன் றாகப் பிரிக்கலாம். நுரை யீரல் மற்றும் இதயத்தில் பிராண ஆற்றல் குறைவாக இருந்தால் கழுத்து முதுகுவலி வரும். சிறுகுடல் மற்றும் பெருங்குடலில் சரியான பிராண ஓட்டம் இல்லை யென்றால் நடு முதுகுவலி வரும். இவர்களுக்கு அஜீரணக் கோளாறும் இருக்கும். அடிமுதுகில் வலி இருந்தால் சிறுநீரகம், சிறுநீர்ப்பையில் பிரச்னை இருக்கலாம். இந்த வலிகளில் ஒன்று இருந்தாலும் அனுசாசன முத்திரை செய்யலாம். சுண்டுவிரல், மோதிர விரல், நடுவிரல் மூன்றையும் உள்ளங்கைகளுக்குள் மடித்து, கட்டைவிரலை மோதிர விரலின் மையத்தில் படுவதுபோல வைக்க வேண்டும். ஆள்காட்டி விரல் நேராக இருக்க வேண்டும். மூன்றுவித முதுகுவலியும் நீங்கும்.

மன அழுத்தம், மலட்டுத்தன்மை, முடி உதிர்வு... பிரச்னைகள் தீர்க்கும் மூன்று நிமிட முத்திரைகள்!

மன அழுத்தம் போக்கும் சின் முத்திரை

பெருவிரல் நுனியானது ஆள்காட்டி விரல் நுனியில் சின்ன அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற மூன்று விரல்கள் தரையை நோக்கி இருக்க வேண்டும். இந்த முத்திரை செய்வதால் மன அழுத்தமும் டென்ஷனும் நீங்கும். இதனால் வருகிற தலைவலியும் சரியாகும்.

மன அழுத்தம், மலட்டுத்தன்மை, முடி உதிர்வு... பிரச்னைகள் தீர்க்கும் மூன்று நிமிட முத்திரைகள்!

மாதவிடாய் வலிக்கு ஆகாய முத்திரை

நடுவிரல், பெருவிரல் இரண்டையும் சேர்த்து நுனியில் சின்ன அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்க வேண்டும். மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்றுவலி, அதிக உதிரப் போக்கு ஆகியவை படிப்படியாகச் சரியாகும்.

நன்றி : அவள் விகடன்

இதையும் படிங்க

தலைமுடிக்கு கண்டிஷனரை பயன்படுத்தும்போது செய்யும் பொதுவான தவறுகள்

கண்டிஷனர்களை பயன்படுத்துவதால் முடி மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும் என்பது உண்மை தான். சிலருக் முடி மிகவும் கடினமானதாகவும், வறண்டு போயும், பளபளப்பு இல்லாமலும்...

40 வயதுக்குள் மாதவிலக்கு நிற்பது நல்ல அறிகுறியல்ல!

இளவயசு மெனோபாஸை ஏதோ முறை தவறின மாதவிலக்குன்னு தப்பாக நினைத்து அலட்சியப்படுத்தாமல் சரியான நேரத்துல மருத்துவ பரிசோதனை அவசியம்.

கூந்தலுக்கு தயிர் செய்யும் அற்புதமான நன்மைகள்!

அடர்த்தியான வலுவான பளபளப்பான கூந்தலை பெறுவது பலருக்கும் கனவாகவே இருக்கலாம். ஆனால் இது உண்மையில் கனவில்லை. நீங்கள் மெனக்கெட்டால் எளிதாக இதை பெற முடியும்.

கர்ப்பிணிகளுக்கு கால் வீக்கம் ஏன் ஏற்படுகிறது

குழந்தையின் எடை அதிகரிக்கும்போது அது அடிவயிற்றில் உள்ள இரத்த நாளங்களை அழுத்தும். அதில் Inferior Vena Cava அழுத்தப்படும் போது கால் வீக்கம்...

கூந்தல் ரொம்ப உதிர்கிறதா? கவலைய விடுங்க..

பெண்களுக்கு அழகே கூந்தல்தான், அந்த கூந்தல் உதிர்ந்தால் ஏதோ அவர்கள் அழகில் கொஞ்சம் பாதி குறைந்துவிடும். இதற்கு மருத்துவரை...

வாடகைத் தாயாக மாறும் உறவினர்கள்!

குழந்தையின்மை பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எல்லா கருத்தரிப்பு மையத்திலும் தம்பதியினரின் கூட்டம் அலைமோதிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் வாடகைத் தாய்க்கான...

தொடர்புச் செய்திகள்

கொரோனா மன அழுத்தம் : நீலகிரி மருத்துவ மாணவன் இத்தாலியில் தற்கொலை

நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரியை சேர்ந்த சதானந்த என்பவரின் மகன்    பிரதீக்ஸ்  (வயது20). இவர் இத்தாலி நாட்டில் மருத்துவ படிப்பு படித்து வந்தார். இத்தாலியில் கொரோனா...

சுஷாந்த் சிங் மரணத்துக்கு நான் காரணம் | கதறும்பாலிவுட் நடிகை

சமீபத்தில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் அவர்கள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த தற்கொலை குறித்து பொலிசார்...

முப்பது வயது ஆண்கள் இதை கவனியுங்கள்.

முப்பது வயது என்பது ஆண்களுக்கு திருமணத்திற்கு மட்டுமல்ல, உடல்நலத்தின் மீதும் அதிக கவனம் செலுத்த வேண்டிய வயதாக இருக்கிறது.மேலும் முப்பது வயதை தாண்டும் ஆண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள் பற்றி...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

நீள் இரவு | சிறுகதை | கவிஜி

இருப்பதிலேயே மோசமான இரவு பிணம் காக்கும் இரவுதான். எல்லாம் மியூட் ஆகி... காலத்தைக் கடப்பது சகிக்க இயலாத கசப்பின்...

40 வயதுக்குள் மாதவிலக்கு நிற்பது நல்ல அறிகுறியல்ல!

இளவயசு மெனோபாஸை ஏதோ முறை தவறின மாதவிலக்குன்னு தப்பாக நினைத்து அலட்சியப்படுத்தாமல் சரியான நேரத்துல மருத்துவ பரிசோதனை அவசியம்.

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 31 | பத்மநாபன் மகாலிங்கம்

தமிழரின் இசைக் கருவிகள்: தமிழரின் இசைக் கருவிகள் மூன்று. 'தமிழ்' என்ற சொல்லின் சிறப்பு ஒலி 'ழ' அல்லவா?  தமிழரின் இசைக் கருவிகளிலும் இந்த 'ழ'...

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

தெல்லிப்பளையில் வன்முறையைத் தூண்டிய அமைப்பைத் தடை செய்ய சிவசேனை வேண்டுகோள்!

மறவன்புலவு க. சச்சிதானந்தன் (சிவ சேனை) பிஞ்சு நெஞ்சங்கள். மாணவ மாண்பினர். பயில...

சூர்யா படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் படத்தை பற்றிய புதிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா...

கர்ணன் படத்தின் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் கர்ணன் படத்தின் தவறை உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டி பதிவு செய்திருக்கிறார்.மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கடந்த...

பிரசாந்த் படத்தில் இணைந்த மாஸ்டர் பட நடிகர்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் அந்தகன் படத்தில் மாஸ்டர் படத்தின் மூலம் ரசிகர்களை கவந்தவர் இணைந்திருக்கிறார்.பிரசாந்த்பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'அந்தாதூன்'....

சகலருக்கும் பிறக்கும் புத்தாண்டில் சுபீட்சமும் அமைதியும் கிட்டட்டும் | விக்கி

இந்தப் பிலவ வருடம் அனைத்து மக்களுக்கும் சுபீட்சத்தையும் அமைதியையும் நல்க வேண்டும் என இறைவனை இறைஞ்சுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது, உரிமையை வென்றெடுக்கலாம் | சம்பந்தன்

எந்தவிதமான துன்பங்கள் துயரங்கள் வந்தாலும் தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

துயர் பகிர்வு