Saturday, May 4, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் மாணவர்களே தேர்வுக்கு தயாராகிறீர்களா?

மாணவர்களே தேர்வுக்கு தயாராகிறீர்களா?

2 minutes read

மாணவ- மாணவிகள் தேர்வு மீது கவனம் செலுத்தும் அதே வேளையில் உடல் ரீதியாக, மன ரீதியாக சில விஷயங்களின் மீதும் அக்கறை கொள்ள வேண்டும்.

உயர் கல்வியையும், எதிர்காலத்தையும் நிர்ணயிக்கும் தேர்வு என்பதால் மாணவர்கள் முன்பை விட படிப்பில் தீவிர கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்கள். தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்வதற்காக இரவு பகல் பார்க்காமல் கண் விழித்து படிக்கவும் செய்வார்கள். நுழைவு தேர்வுக்கு தயாராகு பவர்களும் போட்டா போட்டி போட்டு படிப்பார்கள். தேர்வு மீது கவனம் செலுத்தும் அதே வேளையில் உடல் ரீதியாக, மன ரீதியாக சில விஷயங்களின் மீதும் அக்கறை கொள்ள வேண்டும்.

  • புத்தகம் வாசிப்பது, எழுதிப் பார்ப்பது, ஆன்லைன் வழியாக படிப்பது, இணையதளத்தில் தேடி படிப்பது என பரபரப்பாக இயங்கும்போது கண்களும் ஓய்வின்றி சுழன்று கொண்டிருக்கும். அதனால் எளிதில் சோர்வுக்கு ஆளாகிவிடும்.
  • இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் வழி கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் கணினி, ஸ்மார்ட்போன், மடிக்கணினி திரைகள் மீது மணிக்கணக்கில் கவனம் பதிப்பது கண்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
  • தொடர்ச்சியாக படித்துக்கொண்டிருக்கும்போது மூளையும் சோர்வடையும். அதனை தவிர்க்க போதுமான ஓய்வு கொடுப்பது முக்கியமானது. ஊட்டச்சத்துமிக்க உணவுகளை தேர்ந்தெடுப்பது, சரியான நேரத்தில் அதனை சாப்பிடுவது, நன்றாக தூங்குவது போன்ற விஷயங்களை தவறாமல் பின்பற்றுவது கண்களுக்கு அழுத்தம் கொடுப்பதை தவிர்க்கும். மூளையும் புத்துணர்ச்சி பெற்று சுறுசுறுப்புடன் செயல்பட வழிவகுக்கும்.
  • கட்டிலில் படுத்துக் கொண்டு படிக்காதீர்கள். ஏனெனில் இந்த வழக்கம், கண்களை கஷ்டப்படுத்தி விரைவில் சோர்வடைய செய்துவிடும்.
  • படிக்கும் போது, ​​புத்தகத்திற்கும் கண்ணுக்கும் இடையே குறைந்தது 25 சென்டிமீட்டர் இடைவெளியை பராமரிக்க வேண்டும்.
  • மணிக்கணக்கில் ஒரே இடத்தில் அமர்ந்து படிக்க கூடாது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 10 நிமிடம் படிப்புக்கு ஓய்வு கொடுத்து விட வேண்டும்.
  • படிக்கும்போது நொறுக்குத்தீனிகள் சாப் பிடுவதற்கு பதிலாக பழங்கள் மற்றும் காய் கறிகளை கொண்டு சாலட் தயாரித்து ருசிக்கலாம். இது கண்களின் ஆரோக் கியத்திற்கும் உதவும். சரியான பார்வையை பராமரிக்கவும் துணை புரியும்.
  • படிக்கும்போது தூக்கம் வந்தால் கைகளை கொண்டு கண்களை தேய்க்கக்கூடாது. அது கண்களுக்கு கூடுதல் அழுத்தம் கொடுத்துவிடும். அதற்கு பதிலாக குளிர்ந்த நீரை கண்கள் மீது தெளிக்கலாம். சீரான இடைவெளியில் கண்களில் குளிர்ந்த நீரை தெளித்தும் வரலாம்.
  • படிக்கும் அறையில் வெளிச்சம் பிரகாசமாக இருக்க வேண்டும். ஏனெனில் அறைக்குள் மங்கலான வெளிச்சம் நிலவினால் விரைவில் கண்களுக்கு சோர்வு ஏற்பட்டுவிடும்.
  • ஆன்லைனில் படிக்கும் போது, ​​மானிட்டரை 45 டிகிரி கோணத்தில் வைக்க வேண்டும். அது கண்களுக்கு அசவுகரியத்தை ஏற் படுத்தாது.
  • படிப்பது, தூங்குவது, சாப்பிடுவது, ஓய்வெடுப்பது, பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவது என அனைத்திற்கும் கால அட்டவணை தயாரித்துக்கொள்ள வேண்டும். அதன்படியே செயல்படுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அது மன அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்க உதவும். தேர்வு மீதான பயத்தையும் போக்கும்.
  • மாணவர்கள் நிறைய பேர் தேர்வின்போது மன அழுத்தம் காரணமாக சாப்பிடுவதை தவிர்க்கிறார்கள். உடலில் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால், பலவீனமாக உணரலாம். அது தேர்வு எழுதுவற்கு இடையூறாக அமைந்துவிடும்.
  • உடலில் நீரேற்றத்தை பராமரிப்பது புத் துணர்ச்சியாகவும், மனதை விழிப்புடனும் வைத்திருக்க உதவும். நீரிழப்பு ஏற்பட்டால் தலைவலி மற்றும் படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலைக்கு வழிவகுக்கும். ஒவ்வொரு நாளும் குறைந்தது 2½ முதல் 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். அதனை தேர்வு சமயத்திலும் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

நன்றி | மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More