Sunday, June 13, 2021

இதையும் படிங்க

பேராசிரியர் மௌனகுருவுக்கு இன்று பிறந்த தினம்! | முருகபூபதி

வாழும்காலத்தில் வாழ்த்துவோம்:  மகாபாரதம் -  சார்வாகனனை எமக்கு படைப்பிலக்கியத்தில் வழங்கிய பன்முக ஆளுமை                                                                     முருகபூபதி

எஸ்.பொ எனும் கலகக்காரனுக்குப் பிறந்தநாள்! | ப. தெய்வீகன்

யாழ் நிலத்துப்பாணன், எழுத்துலகின் கலகக்காரன், நற்போக்கு இலக்கிய முகாமின் வீரதுரந்தரன் - எஸ்பொவின் 89 ஆவது பிறந்தினம் இன்றாகும். ஈழத்து இலக்கிய வீச்சுக்கென தனிச்சவுக்கொன்றை செய்து, அதன் இனிய வலிகளை...

காதல் எனக்குள் ஊட்டியதுதான் இந்த வாழ்க்கை..

ஒரு தாய்தன் குழந்தைக்குச்சோறூட்டுகையில்நிலவைக் காட்டுவது மாதிரிகாதல்எனக்கு உன்னைக் காட்டியது. குழந்தை பரவசமாய்நிலவைப் பார்த்துக்கொண்டிருக்கையில்தாய், தன் குழந்தையின்வாய்க்குள்உணவை ஊட்டுவது மாதிரிநான்...

கன்னத்தில் முத்தமிட்டால் | பாகம் இரண்டு | சி. கிரிஷாந்த்ராஜ்

அமுதா மீண்டும் இலங்கைக்கு வருகிறாள். கடந்த முறை ஒன்பது வயதுச் சிறுமியாக தன்னைப்பெற்ற தாயைத்தேடி வளர்ப்புத் தாய், தந்தையோடு வந்தவள் இன்று கணவனோடும்...

கொழும்பிலிருக்கும் சிலோனிலிருந்து திருச்சி சென்ற பயணம்! | முருகபூபதி

அநுராதபுரம் ரயில் நிலையத்தில் மாத்திரமா தமிழர்களை தட்டி எழுப்பினார்கள்…? 1983 கலவரத்திலும்தான்! முருகபூபதி.

இலக்கியக் குடும்பத்தின் மூத்த சகோதரன் மு. பஷீர் மறைந்தார் | முருகபூபதி

அஞ்சலிக்குறிப்பு:  இலக்கியக் குடும்பத்தின் மூத்த சகோதரன்         மு. பஷீர் மறைந்தார். சாய்வு நாற்காலிக்கும் விடைகொடுத்துவிட்டார் -  முருகபூபதி

ஆசிரியர்

வெளிச்சம் | சிறுகதை | ப.தனஞ்ஜெயன்

மகாலட்சுமி தயக்கத்தோடு தான் அந்த ஊருக்கு வந்தாள். எப்படியும் நல்ல வாழ்க்கை கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் தன் கழுத்தை ஆனந்தனுக்கு நீட்டினாள். மகாலட்சுமிக்குப் பிறந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் எரிச்சணாம்பாளையம். தன் கிராமத்து நினைவுகளை அவ்வப்பொழுது பசுமையாக அவள் நினைவுகளில் படர்வ விடுவதுண்டு.

விழுப்புரத்திற்கு வந்து செல்வதென்றால் அவ்வளவு பிரியம் அவளுக்கு. தன்னுடைய கிராமத்தை விட்டு விழுப்புரம் நகரத்தைப் பார்ப்பது அவளுக்கு வெளிநாட்டைப் பார்ப்பது போன்று ஒரு பிரமையை ஏற்படுத்தும். இது ஏதாவது ஒரு பண்டிகைக் காலங்களில் மட்டும் அவளுக்கு நடைபெறும். அண்ணாந்து பார்க்கக்கூடிய கட்டிடங்களைக் கண்டு வியந்தாள். அவள் வருடத்திற்கு ஒருமுறை ஒரு ஜோடி செருப்பு மற்றும் துணிகளை தன் தந்தையோடு விழுப்புரத்தில் வாங்கிச் செல்வது வழக்கம். அலங்கார விளக்குகளைக் கண்டு அவள் அதிசயித்துப் போவாள். 

தன்னுடைய கிராமத்தில் இவ்வளவு பிரகாசமான வெளிச்சங்கள் தெரியவில்லையே என்று வருத்தப் படுவதுண்டு. அவளுடைய கிராமத்தில் சுழற்சிமுறை மின்சாரம் என்பதால் நிறைய நேரங்களில் மின்சாரம் இல்லாமல் மண்ணெண்ணெய் விளக்குகளை ஏற்றி வைத்து நாட்கள் கழிந்ததால், அவளுக்கு நகரத்தின் வெளிச்சம் ஏதோ செய்தது. அதனால் என்னவோ திருமணம் செய்தால் நிரந்தரமான மின்சார விளக்கு தெரியக்கூடிய மற்றும் எரியக்கூடிய ஊர்களுக்குத் தான் திருமணம் செய்து கொண்டு செல்ல வேண்டும் என்ற விருப்பத்தோடு தன் திருமணக் கனவுகளில் வாழ்ந்தவளுக்கு ஆனந்தனோடு திருமணம் நடந்தது.
 
இப்படித்தான் புதுவைக்கு அருகிலுள்ள ஏம்பலம் கிராமத்திற்கு தன் வாழ்க்கையை வாழ ஆனந்தன் வீட்டு மருமகளாக வந்தாள் மகாலட்சுமி.
வந்தவள் தன் கணவனோடு ஆசையோடும், அன்போடும் வாழ்ந்தாள். அவளுக்கு அனைத்து விஷயங்களும் பிடித்துப் போனது. நிற்காமல் குழாயில் வரும் தண்ணீர், தடையில்லாத மின்சாரம், போக்குவரத்து சாலை மற்றும் அவசரத்திற்குக் கடைத்தெரு என சகலமும் தேவையைப் பூர்த்தி செய்வதாக நினைத்தாள்.

தான் பிறந்த கிராமத்தில் வாழும் போது பக்கத்து கிராமத்திற்குச் சென்றுதான் தண்ணீர் எடுத்து வருவாள். அவள் தோழி கமலாவோடு இடுப்பில் ஒரு குடத்தையும், தலையில் ஒரு குடத்தையும் எடுத்துக் கொண்டு, நான்கு ஐந்து முறை இருவரும் சென்று வருவார்கள். சமையலுக்கு, குடிப்பதற்கு என்று ஒவ்வொரு நாளும் தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்வாள். “நீயும் கல்யாணம் செய்து கொண்டால் தண்ணீரும், மின்சாரம் தடையில்லாத கிராமமாகப் பார்த்துப் போய்விடு” என்று சிலாகித்துப் பேசிக் கொண்டே செல்வார்கள்.

அதற்குக் கமலா “இல்லை மகாலட்சுமி அப்படித்தான் வேண்டும் என்று பார்த்து, எத்தனையோ கிராமத்தை விட்டுவிட்டு அனைவரும் புலம் பெயர்ந்தால் ஒரு இடத்தில் வசிக்கமுடியாது. இது நமது மண், நம்மை வளர்த்த மண். இந்த மண்ணை ஒரு நாளும் குறை சொல்லாதே… ஏதோ பிழைப்பிற்கும் பணத்திற்கும் சென்றவர்கள் இறுதியாக இங்கு வந்துதான் ஆக வேண்டும் மகாலட்சுமி” என்று கூறினாள்.
 
எப்பொழுதும் பிறந்த மண்ணில் காற்றைச் சுவாசிக்கும் இன்பம் அலாதியானது. அதை நிறைய முறை உணர்ந்திருக்கிறாள்.
 
இதையெல்லாம் நினைவின் அலைகளாய் அடித்துக் கொண்டே தண்ணீர்க் குழாயில் துணிகளைத் துவைத்துக் கொண்டிருக்கும்போது வந்த ஆனந்தனைப் பார்த்து, “என்ன இன்று வேலை எதற்கும் போகவில்லையா?” என்று கேட்டாள்.
 
“இல்லை மகா… இந்த வாரம் நைட் ஷிப்ட் போக வேண்டும்” என்றான்.

ஆனந்தன் செக்யூரிட்டி வேலை செய்கிறான். மாதந்தோறும் சம்பளம் பெற்று அதற்கான செலவும் தயாராகக் காத்திருந்தது. இரண்டு பிள்ளைகளைப் 
பெற்றெடுத்தான். இந்த சமூகத்தின் பகட்டு வாழ்வை விரும்பாதவன், தன் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தான். ஆனால் இன்று அரசுப் பள்ளி என்றால் பின்தங்கிய சமூகத்திற்கான அடையாளத்தைத் தந்துவிட்ட சூழல் வருந்தச் செய்கிறது. பின்தங்கிய சமூகத்திலிருந்து வெளிச்சத்திற்கு வந்த மனிதர்கள் கூட அரசுப் பள்ளியில் தம் குழந்தைகளைச் சேர்ப்பதில்லை.
 
பிள்ளைகளிடம் ஆனந்தன் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் ‘என்னைப்போல் துன்பப் படாதீர்கள்’ என்பதுதான். அதற்குக் காரணம் அவனை இந்த சமூகம் புறக்கணித்ததாக உணர்ந்ததுதான். பெரும்பான்மையான முதலாளிகள், தொழிலாளிகளின் நலன் கருதவில்லை என்றும் நினைப்பதுண்டு.
 
வீட்டு வேலைகளுக்கிடையில் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி விட்டு, இருவரும் சாப்பிட அமர்ந்தார்கள். அப்பொழுது மெல்ல “ஏங்க நிறைய நாட்களாக கரெண்ட் பில் கட்டாமல் கிடக்கிறது. இந்த மாதம் சம்பளம் வாங்கியாவது கட்டி விடுங்கள்” என்றாள் மகாலட்சுமி.
 
“பால்பாக்கி, மளிகைக்கடை, மருந்து மாத்திரைகள் மற்றும் நான் போய் வரச் செலவுக்கே சரியாகப் போகிறது மகா. நான் சீக்கிரம் கட்டி விடுகிறேன்” என்றான் ஆனந்தான்.
 
“இல்லை… பிள்ளைகள் பக்கத்து வீட்டிற்குச் சென்று படித்துவிட்டு வருகிறார்கள். எத்தனை நாள் தான் இப்படி” என்று ஆதங்கப் பட்டாள்.
 
“சரி மகா. உன்னுடைய மூக்குத்தியைக் கொஞ்சம் கழட்டிக் கொடு. நான் அடமானம் வச்சுட்டு கரெண்ட பில்லை  கட்டி விடுகிறேன்” என்று இருவரும் பேசி முடிவெடுத்தார்கள்.
 
மகாலட்சுமி அப்பொழுது ஆனந்தனிடம் 
 
“ஏங்க நாம்தான் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருக்கிறோமே… நமக்கு இலவசமா மின்சாரம் தரக் கூடாதா?” என்று கேட்டாள். ஆனந்தன் சிரித்து விட்டு, அவள் கொடுத்த மூக்குத்தியை அடகு வைக்கக் கிளம்பினான். அவள் வீட்டிலும் அடுப்பு எரிந்து கொண்டிருந்தது.
 
– ப.தனஞ்ஜெயன்

நன்றி : கீற்று இணையம்

இதையும் படிங்க

ஊழல்கள் பலவிதம் | கவிதை

இல்லாத விடயத்தைஇருக்குது என்றால்இவரு உரையில் ஊழல் சொல்லாத விடயத்தைசொன்னதாய்ச் சொன்னால்சொன்னவர் சொல்லில் ஊழல் பொல்லாத...

என்ன தவம் செய்தேன் | பேராசிரியர் சி. மௌனகுரு

இங்கிவரை  நான் பெறவே  என்ன தவம் செய்து  விட்டேன்.  அவர்களின்  அண்மைய  குழப்படி   மிகுந்த  நன்றி  மாணவர்களே ------------------------------------------------------------------

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் இணையவழி நினைவரங்கு

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்,  கலை, இலக்கியம், கல்வி,  இதழியல், சமூகம் மற்றும் வானொலி ஊடகத்துறை  சார்ந்து பணியாற்றி,   அவுஸ்திரேலியாவில் முன்னர்...

கலைந்தும் கலையாத.. | சிறுகதை | விமல் பரம்

அலுவலகத்தில் இருந்து வந்ததும் அண்ணா தன் அறைக்குள் போய் கதவை மூடிக் கொண்டான். முகத்தில் கவலை தெரிந்தது. ஏதோ நடந்திருக்கிறது. நான் அம்மாவைப்...

சரிநிகர் நினைவுகள்

1990 யூன் 10ஆம் திகதி சரிநிகரின் முதல் இதழ் வெளியான நாள். எவ்வாறான ஒரு பத்திரிகையைக் கொண்டு வர வேண்டுமென்று விரும்பியிருந்தோமோ அதற்கான முதற் காலடி அது.

கவிதை | ருசி | சி.கிரிஷாந்த்ராஜ்

அணில் தின்ற மீதிக்கொய்யா!கிளி கொத்திய மாம்பழம்!மாமரத்தில் உடைத்துவாயூறத்தின்ற மாங்காய்! கல்லெறிந்து விழுத்திகோதுடைக்கும் புளியம்பழம்!உதடொற்றி தேனூறும்காட்டுப் பாலைப்பழம்!

தொடர்புச் செய்திகள்

கலைந்தும் கலையாத.. | சிறுகதை | விமல் பரம்

அலுவலகத்தில் இருந்து வந்ததும் அண்ணா தன் அறைக்குள் போய் கதவை மூடிக் கொண்டான். முகத்தில் கவலை தெரிந்தது. ஏதோ நடந்திருக்கிறது. நான் அம்மாவைப்...

சுமை | சிறுகதை | சன்மது

1990-ல் "கருமி ... ஓடுடி ... சீக்கிரம்" "ஏன்டா... பல்லா..." ஓடிக் கொண்டிருந்த புஷ்பராஜ் நின்று ஜெயந்தியை...

விடுபடுதல் | சிறுகதை | அருண் குமார் செல்லப்பன்

அஸ்வின் Tidel Park க்கில் நைட் ஷிப்ட்டில் வேலை செய்கிறான். சமீபத்தில்தான் Team Lead ஆக பதவி உயர்வு கிடைத்திருந்தது. இன்னும் மூன்று மாதங்களில் திருமணம் நடக்கவிருக்கிறது.

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

காதல் எனக்குள் ஊட்டியதுதான் இந்த வாழ்க்கை..

ஒரு தாய்தன் குழந்தைக்குச்சோறூட்டுகையில்நிலவைக் காட்டுவது மாதிரிகாதல்எனக்கு உன்னைக் காட்டியது. குழந்தை பரவசமாய்நிலவைப் பார்த்துக்கொண்டிருக்கையில்தாய், தன் குழந்தையின்வாய்க்குள்உணவை ஊட்டுவது மாதிரிநான்...

வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு சருமத்தின் அழகை பாதுகாக்க

கடலைமாவு தலைமுடி மற்றும் முகம் இரண்டையும் அழகூட்டும். அந்த கடலைமாவுடன் தயிர், மஞ்சள் தூள், எலுமிச்சை ஆகியவற்றைக் கலந்து முகத்தில் அப்ளை செய்து...

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

ஊழல்கள் பலவிதம் | கவிதை

இல்லாத விடயத்தைஇருக்குது என்றால்இவரு உரையில் ஊழல் சொல்லாத விடயத்தைசொன்னதாய்ச் சொன்னால்சொன்னவர் சொல்லில் ஊழல் பொல்லாத...

கொத்தமல்லி – உருளைக்கிழங்கு வறுவல்

தயிர் சாதம், சாம்பார் சாதம், தோசை, நாண், சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த கொத்தமல்லி - உருளைக்கிழங்கு வறுவல். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

‘மாநாடு’ டிரெய்லர் ரிலீஸ் அப்டேட்

தமிழில் உருவாகி உள்ள மாநாடு படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் திறக்க கட்டுப்பாட்டுடன் அனுமதி

ஒரு மாதத்துக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதால் அதிக அளவில் கூட்டம் கூடி விடக்கூடாது என்பதற்காக டாஸ்மாக் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

பிரியங்கா காந்தி கடும் தாக்கு-கோழையை போல் செயல்படும் மோடி!

புதுடெல்லி: `யார் பொறுப்பு?’ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் காங். பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று வௌியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: பிரதமருக்கு மக்கள் முதலில் முக்கியமல்ல. அரசியல் தான் முக்கியம்....

துயர் பகிர்வு