Wednesday, January 26, 2022

இதையும் படிங்க

அம்மா | சிறுகதை | சி.மதிவாணன்

சின்னதாக ஓர் ஆசை எந்தவொருவருக்கும் இருக்கும். சின்னதாக… மிகச் சின்னதாக ஓர் ஆசை. ஆனாலும், அது கைகூடாததாகவே இருக்கும்.

வெட்டுக்கிளிகளின் நூற்றியெட்டுக் கதைகள் |  துவாரகன்

இன்று நீ என்ன செய்து கொண்டிருப்பாய்?பிரமிப்பில் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டிருப்பாய்.இனிப்புப் பலகாரங்களையும்சில புதிய ஆடைகளையும்வாங்கி வைத்திருப்பாய்.பவுடர் அப்பிய முகத்துடன்புன்னகை பூத்தபடி,படியேறும்போதுஎந்த வார்த்தையை முதலில்பேசவேண்டுமென்றுமனப்பாடம்...

தை திருமகளே வருக வருக | கவிதை | கவிப்புயல் இனியவன்

தை - திருமகளே வருக வருக ....தைரியம் துணிவு சிறக்க வருக வருக  ....தை பிறந்தால் வழி பிறக்க வருக வருக  ....தைத்தியரை...

அகலிகையின் செருப்பு | துவாரகன்

மற்றவர் பொருளைத் திருடஎன் தந்தைஎனக்குக் கற்றுத் தரவில்லை.நானும் என் மகனுக்குகற்றுக் கொடுக்கப் போவதில்லை.

தேவதைகளின் தினம் | கவிதை | கிருஷ்ண தேவன்

எனதுஅம்மாஞ்சித்தனம்உனதுபுன்னகையின்கடவுச்சொல் ! ================ உன்னைப்பற்றிஎழுதிவிட்டுமறதியில்திறந்தே வைத்துவிட்டபேனாவின் மையைஉலர்த்த...

தீபச்செல்வனின் பயங்கரவாதி பற்றி இந்து பத்திரிகையில் வெளியான செய்தி

ஈழத்து இளந்தலைமுறை படைப்பாளிகளில் முக்கியமானவர்களில் ஒருவர் தீபச்செல்வன். இவரது ‘நடுகல்’ நாவல் (2018) சிங்களத்திலும் வெளியாகியிருக்கிறது. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு விரைவில் வெளியாக...

ஆசிரியர்

பாட்டி வீட்டுப் பொங்கல்!

புது வருசம் பிறந்ததும் … வீட்டில் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருப்பது பொங்கல் பண்டிகை தான்.

பெரியவர்கள் பொங்கலுக்கு வெள்ளை அடிக்கனும் , வீட்டை சுத்தம் செய்யனும் பேசிக் கொண்டிருக்க … எனக்கோ பொங்கல் இனிப்பு அப்படியே நாவில் சுவை வந்து போனது.

அதுவும் பாட்டி வீட்டில் பொங்கல் வைப்பது ஒர் பெரிய திருவிழா போல் இருக்கும்.  வீட்டை வெள்ளை அடித்து,  எங்கும் புதிதாக தோரணம் கட்டி, மாவிலை பறித்து வாசலில் தொங்க விட்டு பாட்டியும் தாத்தாவும் உறவுகள் வருகைக்காக காத்திருப்பார்கள்.

நானோ … சித்தி, சித்தப்பா, மாமா, அத்தை, அவர்களின் பிள்ளைகள் எல்லோரும் எப்போ வருவார்கள் என்று வாசலில் சத்தம் கேட்கும் போதெல்லாம் ஓடி ஓடி பார்ப்பதுமாக நாட்கள் ஓடும்…

ஒரு வழியாக பொங்கல் நாள் நெருங்கையில் ஒருவர் பின் ஒருவராக வர ஆரம்பிப்பார்கள்.

அம்மா பொங்கல் பானை சுத்தம் செய்து அலங்காரம் பன்ன, சித்தயும் அத்தையும் சேர்ந்து புது நெல்லை உரலில் குத்தி அரிசி எடுக்கையில், அவர்கள் சிரித்து பல கதைகள் பேசுவதைக் கேட்பது  மேலும் இனிமையாக இருக்கும்.

அப்பா, மாமா கடைக்கு போய் வெல்லம்,  கரும்பு, மஞ்சள் கொத்து, காய்கறிகள் வங்கி வருவதும், சத்தமாக அவர்கள் சேர்ந்து விவாதம் பன்னுவதும் கூட கேட்க நன்றாக இருக்கும்.

சிறுவர்கள் நாங்கள் சொப்பு சாமான் வைத்து கருவேல மரத்தின் இலை, பூ, காய் என்று அனைத்தையும் பறித்து, தேங்காய் சரட்டையில் பொங்கல் வைத்து அனைவருக்கும் கொடுத்து சிரித்து மகிழ்வோம்.

பொங்கல் நாளும் வந்தது…

விடியற்காலையில் தை திருநாளாம் பொங்கல் திருநாளில் வண்ண வண்ண கோலமிட்டு மகிழ்வோம்.

அனைவரும் நீராடி பின்பு சிறுவர்கள் நாங்கள் புத்தாடை உடத்தி இங்கும் அங்கும் ஓடி விளையாடுவோம்.

அம்மா, சித்தி,  அத்தை அனைவரும் பாட்டி தாத்தா எடுத்து தந்த பட்டாடை உடுத்தி அழகு பார்ப்பதும்; அப்பா, சித்தப்பா, மாமா என்று அனைவரும் தமிழர் உடையான வேட்டி மற்றும் சட்டை அணிந்து வளம் வருவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

பின்பு அனைவரும் சேர்ந்து கரும்பு மற்றும் மஞ்சல் கொத்தை நிலப்படியில் கட்டுவார்கள். சிறுவர்கள் எங்களுக்கும் சாப்பிட சிறிய கரும்பு துண்டுகளையும் பெறுவோம். “உங்கள் ஆடையை அழுக்காக்காமல் சாப்பிடுங்கள்” அம்மா குரல் பின்னல் இருந்து ஒலிக்கும்.

பொங்கல் வைக்க நல்ல நேரம் தாத்தா பார்த்ததும், மணல், விறகு,  செங்கல் என்று அப்பா, சித்தப்பா, மாமா எடுத்து வருவார்கள்.

பாட்டி வீட்டின் நடுவில் மணல் பரப்பி, செங்கல் வைத்து அடுக்கி, அடுப்பு செய்து, விறகு வைத்து சூடம் ஏற்றி அடுப்பை பத்த வைத்து, பொங்கல் பானை அடுப்பல் வைத்து, அரிசி அலசிய தண்ணீரை பானையில் ஊற்றி, பால் எப்போ பொங்கும் என்று காத்திருந்து, பால் பொங்கும் சமயத்தில், பாட்டி அந்த சங்கை யாராவது ஊதுங்க என்று சொல்ல, சிறுவர் முதல் பெரியவர் வரை சங்கை ஊத முடியாமல் தவிக்க, கடைசியில் பாட்டியே சங்கை வாங்கி ஊத “பொங்கலோ பொங்கல்” என்று அனைவரும் குலவையிட்டு ஒருவர் பின் ஒருவராக பானையில் அரிசி போட, நன்கு அரிசி வெந்ததும், வெல்லம் சுக்கு போட்டு கிளறி, நெய் ஊற்றி சாமிக்கு வைத்து படைத்து, அனைவருக்கும் பாட்டி மணக்க மணக்க பொங்கல் பரிமாறி அதை சாப்பிடும் பிள்ளைகளை கண்டு சந்தோசம் அடைவார்கள்.

எனக்கோ, இரண்டாவது பத்தியில் நான் சொன்னது போல், இனிமையாக நினைவுகூரப்பட்ட கரும்பினும் இனிய பாட்டியின் வீட்டு பொங்கலை சுவைப்பதில் பேரானந்தம்.

– மாணிக்க மீனாட்சி அன்பழகன்

நன்றி : muenchentamilsangam.org

இதையும் படிங்க

விழி பிதுங்கும் மாடுகள் | துவாரகன்

அந்த நாற்றத்தைநாங்கள்மூன்று தலைமுறையாகஅனுபவிக்கிறோம்என்றார் பெரியவர். நல்ல மாட்டுக்குஒரு சூடு போதும்.இந்த மாடுகளைஎன்னதான் செய்வது? கால்களைப்...

கவிஞர் கவிகூத்தனின் “கழுதை சுமந்த கவிதைகள்” நூல் இலண்டனில் வெளியீடு

புலம்பெயர் தேசத்தில் பலராலும் அறியப்பட்ட கவிஞர் கவிகூத்தனின் "கழுதை சுமந்த கவிதைகள்" நூல் இன்று இலண்டன் மேற்கு நகரில் அமைந்துள்ள ஹரோ வீல்ட் ஐயப்பன் ஆலய மண்டபத்தில் மிகவும் சிறப்பாக...

நடுகல் சிங்கள நாவல் குறித்து உரையாடல்

நடுகல் நாவலின் சிங்கள மொழியாக்கமான 'ஸ்மாரக்க ஷிலாவத்த' எனும் புத்தகம் குறித்து இணைய வழியில் விமர்சனக் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

தந்தை | கவிதை | யாழினி

சிறிது சிரிப்புகள்சிறிது கோபங்கள்சிறிது விளையாட்டுகள்சிறிது பரிகாசங்கள் உள்ளே சிறுபிள்ளைத்தனம்அனால், வெளியே தந்தை முகம் சிலநேரம்பிரளயத்திற்கு...

இலண்டனில் Griffin கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக பேராசிரியர் பாலசுகுமார்

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் பாலசுகுமார் இலண்டன் Griffin கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக நியமிக்கப்பட்டார். கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதியாவும்...

இலினோயிஸ் மாநிலத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவ துணை நின்ற டாக்டர் ஸ்கந்த குமார் மறைவு

ஈழத்தை பூர்வீகமாகக் கொண்டு அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்த டாக்டர் ஸ்கந்தகுமார் காலமானார். சிக்காக்கோ தமிழ் சங்கத்தில் அங்கம்...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பாட்டி வீட்டுப் பொங்கல்!

புது வருசம் பிறந்ததும் … வீட்டில் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருப்பது பொங்கல் பண்டிகை தான். பெரியவர்கள் பொங்கலுக்கு வெள்ளை அடிக்கனும் , வீட்டை சுத்தம்...

தேவதைகளின் தினம் | கவிதை | கிருஷ்ண தேவன்

எனதுஅம்மாஞ்சித்தனம்உனதுபுன்னகையின்கடவுச்சொல் ! ================ உன்னைப்பற்றிஎழுதிவிட்டுமறதியில்திறந்தே வைத்துவிட்டபேனாவின் மையைஉலர்த்த...

ஒளியால் திரைக்கு வழிகாட்டியவர் இயக்குநர் பாலுமகேந்திரா

தமிழ்த்திரையின் ஒப்பற்ற ஒளிப்பதிவாளரும், சிறந்த இயக்குநருமான பாலுமகேந்திரா அவர்கள் 13.2.2014 அன்று மூச்சு திணறல் காரணமாக மரணமடைந்தார். அவரது...

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

கொள்ளையிடப்பட்ட மகிந்தவின் பணத்தின் பின்னணி என்ன?

 பணச்சலவையுடன் தொடர்புடைய ஒருவர் இலங்கையின் நிதியமைச்சராக பதவியேற்றுள்ளமையானது, கின்னஸ் சாதனையாகும் என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற...

மகளை தொடர்ந்து மகனை களமிறக்கும் ஷங்கர்

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர், தனது மகனை படங்களில் நடிக்க அனுமதி வழங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரமாண்ட...

சூர்யா படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. சன்...

கொழும்பில் இடம்பெற்ற இந்தியாவின் 73 ஆவது குடியரசு தினம்

இந்தியாவின் 73 வது குடியரசு தினம் இன்று 2022.01.26 ஆம் திகதி கொழும்பில் அமைந்துள்ள உயர்ஸ்தானிகராலயத்தால் கொண்டாடப்பட்டது.  உலகின் பாரிய...

புலிகளை மீள உருவாக்க முயற்சியாம் | 26 பேரின் கையெழுத்து பரிசோதனைக்கு உத்தரவு

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் நோக்கில்  ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 26 சந்தேக நபர்களின் கையெழுத்துக்களை...

கம்பஹா, கொழும்பில் கொவிட் பரவல் தீவிரம் – சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

நாட்டின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் கம்பஹா மாவட்டத்தில் கொவிட் வைரஸின் பரவல் வெகுவாக அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். 

துயர் பகிர்வு