September 28, 2023 10:24 pm

தமிழ் தேசிய கலை இலக்கியப் பேரவை முன்னெடுத்த தியாவின் நூல் வெளியீடு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

 

நேற்றைய தினம் (20) கரைச்சிப் பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கலை இலக்கியப் பேரவையின் அங்குரார்ப்பணத்தோடு இணைந்த, புலம்பெயர் எழுத்தாளர் தியாவின் (இராசையா காண்டீபன்) ‘நீ கொன்ற எதிரி நான் தான் தோழா’ எனும் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வில் முதன்மை விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்துகொண்டார்.

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, கரைச்சிப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன், கரைச்சிக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் சுப்பிரமணியம் தர்மரட்ணம், முரசுமோட்டை முருகானந்தாக் கல்லூரியின் அதிபர் திருமதி.சூரியகுமாரி இராசேந்திரம், துணுக்காய் கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் சுந்தரலிங்கம் லோகேஸ்வரன், ஆசிரியர் அருணாசலம் சத்தியானந்தன், தேசிய கல்வி நிறுவகத்தின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் சிதம்பரநாதன் கதிர்மகன், மூத்த எழுத்தாளர் குரு சதாசிவம், யாழ் பல்கலைக்கழக மாணவர்களான கி. அலக்ஷன், லம்போ கண்ணதாசன் ஆகியோரோடு கவிஞர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்