September 22, 2023 5:42 am

சிங்களத்தில் வெளியாகும் தீபச்செல்வனின் முதல் கவிதை நூல்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளருமான தீபச்செல்வன் எழுதிய முதல் கவிதை நூலான பதுங்கு குழியில் பிறந்த குழந்தை தொகுப்பு சிங்களத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு எதிர்வரும் இலங்கை புத்தகக் கண்காட்சியில் வெளியாகவுள்ளது.

அனுசா சிவலிங்கம் இந் நூலை சிங்களத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். அத்துடன் NINE பப்ளிசிங் என்ற சிங்கள பதிப்பகம் நூலை வெளியிட்டுள்ளது. தீபச்செல்வனின் முதல் நூலும் முதல் கவிதை தொகுப்புமான பதுங்கு குழியில் பிறந்த குழந்தை தமிழில் மிகவும் பேசப்பட்ட கவிதை தொகுப்பாகும்.

ஈழத்து இலக்கிய உலகில் வலிமை மிக்க குரலாக கொண்டாடப்படுகிற தீபச்செல்வனின் இத் தொகுப்பு சிங்களத்திலும் பெரும் கவனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை தீபச்செல்வனின் முதல் நாவலான நடுகல் சிங்களத்தில் மொழியாகி பெரும் வரவேற்பினை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்