Sunday, July 25, 2021

இதையும் படிங்க

மகாராஷ்டிராவில் தொடரும் பலத்த மழையால் 112 பேர் உயிரிழப்பு

இந்தியா, மகாராஷ்டிராவில் தொடரும் பலத்த மழை காரணமாக உண்டான வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்குண்டு சனிக்கிழமை இரவு வரை 112 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒற்றையர் பிரிவு ஆட்டத்திலிருந்து விலகினார் ஆண்டி முர்ரே

இரண்டு முறை நடப்பு சாம்பியனான ஆண்டி முர்ரே டோக்கியோ ஒலிம்பிக்கின் ஒற்றையர் டென்னிஸ் பிரிவிலிருந்து விலகியுள்ளார். ஒலிம்பிக் 2020 ஆட்டங்கள்...

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதலில் 33 தலிபான்கள் பலி

ஆப்கானிஸ்தான் படைகள் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான தாக்குதலை தலிபான்கள் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் ராணுவம் வான்வழித் தாக்குதலை ஒருவார காலமாக நடத்துகிறது.

நான்கல்ல நாற்பது திருமணமும் செய்வேன்! – வனிதா அதிரடி

பவர்ஸ்டார் சீனிவாசனுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் குறித்து நடிகை வனிதா விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார். இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற நடிகை வனிதா,...

இரவு தூக்கமும்.. காலை நேர சோர்வும்…

கணினி போன்ற மின்னணு சாதனங்கள் முன்பு அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்வது, ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது இரவில் தூக்கமின்மைக்கு வழிவகுக்கும்.

இந்தியா, இலங்கை மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் இன்று

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. ஷிகர் தவான் தலைமையிலான...

ஆசிரியர்

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் இணையவழி நினைவரங்கு

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்,  கலை, இலக்கியம், கல்வி,  இதழியல், சமூகம் மற்றும் வானொலி ஊடகத்துறை  சார்ந்து பணியாற்றி,   அவுஸ்திரேலியாவில் முன்னர் மறைந்த தமிழ் ஆளுமைகளை நினைவுகூரும் அரங்கினை எதிர்வரும் 20 ஆம் திகதி  (  20-06-2021  ) ஞாயிறு – இரவு 7-00 மணிக்கு     ( அவுஸ்திரேலியா – மெல்பன் நேரம் ) இணையவழி காணொளியூடாக நடத்தவிருக்கிறது.

சங்கத்தின்  தலைவர்  மருத்துவர் ( திருமதி ) வஜ்னா ரஃபீக் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியை எழுத்தாளரும், சங்கத்தின் துணை நிதிச்செயலாளருமான               திரு. லெ. முருகபூபதி ஒருங்கிணைத்துள்ளார்.

இந்தத் தொடர் அரங்கின் முதலாவது அங்கம் கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி நடந்தவேளையில்,  ஏற்கனவே அமரத்துவம் எய்திய  எழுத்தாளர்கள்   எஸ். பொன்னுத்துரை , நித்தியகீர்த்தி, காவலூர் இராஜதுரை,  கலாநிதிகள்  வேந்தனார் இளங்கோ,                    ஆ. கந்தையா,  பேராசிரியர்கள்  பொன். பூலோகசிங்கம், கைலாசநாதக் குருக்கள் ஆகியோரின் வாழ்வும் பணிகளும் தொடர்பான நினைவுரைகள் நிகழ்த்தப்பட்டன.

இந்தத் தொடர் அரங்கின் இரண்டாவது அங்கம் எதிர்வரும் 20 ஆம் திகதி  இடம்பெறவுள்ளது.  

இவ்வரங்கில்  ஓவியர் கே.ரி. செல்வத்துரை பற்றி அவரது பேரனும் இசைக்கலைஞருமான திரு. அர்ஜுனன் புவீந்திரன் உரையாற்றுகிறார். 

ஓவியர் செல்வத்துரை இலங்கையிலும்,  புகலிடம்பெற்ற அவுஸ்திரேலியாவிலும் புகழ்பெற்றவர்.  அத்துடன் ஒளிப்படக் கலைஞருமாவார்.  

நாம் இன்றும் ஊடகங்களிலும்  தமிழ்ப்பாட நூல்களிலும் காணும் நவாலியூர் சோமசுந்தரப்புலவர், மற்றும் யோகர் சுவாமிகளின் படங்களை அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே தமது  ஒளிப்படக்கருவியால் பதிவுசெய்த  கலைஞருமாவார். அவரது ஓவியக்கண்காட்சிகள் முன்னர் மெல்பனில் நடந்துள்ளன.  

கலைவளன் சிசு. நாகேந்திரன் பற்றிய நினைவுரையை அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நடப்பாண்டு துணைத்தலைவர் திரு. மணியன் சங்கரன் நிகழ்த்துவார்.  சிசு. நாகேந்திரன், இலங்கையில் குத்துவிளக்கு, நிர்மலா முதலான திரைப்படங்களிலும் நடித்தவர். அத்துடன் நாடக, கூத்து கலைஞருமாவார்.    அந்தக்காலத்து யாழ்ப்பாணம், பிறந்த மண்ணும் புகலிடமும்,  தமிழ் – ஆங்கிலம் மொழிமாற்று அகராதி முதலான நூல்களையும் எழுதியவர். இந்த அரங்கை நடத்தும்  சங்கத்தின் தலைவராகவும், காப்பாளராகவும் முன்னர் இயங்கியவர்.

இலங்கையில்  கல்விப்பணிக்கு தமது வாழ்நாளை அர்ப்பணித்தவரும் இந்திய தத்துவ ஞானம் என்ற அரிய நூலை எழுதியவருமான வித்தியாதிபதி கி. இலக்‌ஷ்மண அய்யர், அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னர் மறைந்தவர்.

தமிழ் ஊடகங்களில் எழுத்துப்பிழைகள், கருத்துப்பிழைகள் நேர்ந்துவிடாதிருக்கவேண்டும் என தொடர்ந்து தமது கட்டுரைகள் வாயிலாக வலியுறுத்தி வந்திருப்பவர்.

அவர் மறைந்த பின்னர் வெளியான அவரது கட்டுரைகள் அடங்கிய நூல் சிப்பிக்குள் முத்து அவுஸ்திரேலியாவில் வெளியிடப்பட்டது. அன்னாரைப்பற்றிய நினைவுரையை  யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளரும் தற்போது கனடாவில் வசிப்பவருமான இலக்கிய திறனாய்வாளர் கலாநிதி நா. சுப்பிரமணிய அய்யர் நிகழ்த்துவார். 

இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றியவரும் அவுஸ்திரேலியாவுக்கு முதல் முதலில் புகலிடம்பெற்று வந்த தமிழ் சமூகத்தினரின் ஞானத்தந்தையாக விளங்கியவருமான பேராசிரியர் சி. ஜே. இலியேஸர்,  மெல்பன்               3 E A  வானொலியின் தமிழ் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் இயங்கியவர். அத்துடன் விக்ரோரியா இலங்கைத் தமிழ்ச்சங்கம்,  அவுஸ்திரேலிய தமிழ்ச்சங்கங்களின் சம்மேளனம் ஆகியனவற்றின் ஸ்தாபகத் தலைவராகவும் பணியாற்றியவர்.

அவுஸ்திரேலியாவில் ,  இலங்கைத்தமிழர்களின் உரிமைகள் , நலன்கள் தொடர்பாக நடந்த பல்வேறு மாநாடுகள், கருத்தரங்குகளிலும் பங்கேற்றவர்.

இவர் பற்றிய நினைவுரையை, விக்ரோரியா இலங்கைத் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவரும் சமூகப்பணியாளருமான மருத்துவ கலாநிதி இராஜன் இராசையா நிகழ்த்துவார்.

இலங்கை வானொலி, லண்டன் பி. பி.சி. தமிழோசை முதலானவற்றில் முன்னர் பணியாற்றியவரும், இலங்கை நாடாளுமன்றில் முன்னர் சமகால மொழிபெயர்ப்பாளராக இயங்கியவருமான   ‘ சுந்தா  ‘  சுந்தரலிங்கம், இலங்கை வானொலி கலையகத்தில் சிறந்த நாடகக்கலைஞராகவும் விளம்பர அறிவிப்பாளராகவும்  மிளிர்ந்தவர்.

அப்பல்லோ விண்கலம் சந்திரனில் தரையிறங்கிய வேளையில் அந்த உலகசாதனை பற்றி வானொலிகளில்  விவரணச்சித்திரம் வழங்கி, அன்றைய அமெரிக்க ஜனாதிபதியால் சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்டவர்.  அன்று முதல்   “ அப்பல்லோ  “ சுந்தா எனவும் அழைக்கப்பட்டவர். 

சிட்னிக்கு வந்தபின்னரும் வானொலி ஊடகத்துடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர். இவர் தமது வானொலி ஊடக அனுபவம் சார்ந்து எழுதிய மனவோசை நூல் குறிப்பிடத்தகுந்தது.

சுந்தா – சுந்தரலிங்கம் பற்றிய நினைவுரையை சிட்னியில் வதியும் எழுத்தாளரும், ஊடகவியலாளரும் தமிழ் அவுஸ்திரேலியன் இதழின் முன்னாள் ஆசிரியருமான  சட்டத்தரணி கலாநிதி ( திருமதி ) சந்திரிக்கா சுப்பிரமணியம் நிகழ்த்தவுள்ளார். 

புகழ்பெற்ற கட்டிடக்கலைஞரும், குத்துவிளக்கு –  ஈழத்து திரைப்படத்தின் தயாரிப்பாளருமான  வி. எஸ். துரைராஜா, சிறந்த சமூகப்பணியாளருமாவார்.

இலங்கையில் நடந்த தமிழராய்ச்சி மாநாடு மற்றும் தமிழ் அகதிகள் புனர் வாழ்வுக்கழகம் முதலானவற்றின் பணிகளில் பங்கேற்றவர்.

யாழ் . பொது நூலகம் 1981 ஆம் ஆண்டு எரிக்கப்பட்டதன் பின்னர், அதன் புனர் நிர்மாணப்பணிகளுக்காகவும் ஆக்கபூர்வமாக உழைத்தவர்.  யாழ். பொது நூலகம் குறித்த ஆவணப்பதிவொன்றையும் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார்.

அன்னாரைப்பற்றிய நினைவுரையை  அவுஸ்திரேலியத்  தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் உறுப்பினரும், ஆங்கிலத்திலும், தமிழிலும் இலக்கியப்பிரதிகள் எழுதிவருபவருமான திருமதி சகுந்தலா கணநாதன் நிகழ்த்துவார். 

சிட்னியில் தமிழ் நூலகம் அமைப்பதில் பல வருடங்களுக்கு முன்னர் பாடுபட்ட  கலாநிதி வே. இ. பாக்கியநாதன்,  தமிழ் நூலகம்  தொடர்பாக வழிகாட்டும் கைநூலும் எழுதியவர். சிட்னியிலிருந்து வெளியான கலப்பை இதழில் எழுத்தின் கதை என்ற தலைப்பில் கல்லிலிருந்து கணினி வரையில்  தமிழ் எழுத்தின் வரிவடிவத்தில் நேர்ந்த  மாற்றத்தையும் வளர்ச்சியையும்  ஆய்வுக்கண்ணோட்டத்தில் எழுதியவரான   கலாநிதி வே. இ . பாக்கியநாதன் ,  தொடர்ந்தும் பல ஆய்வுக்கட்டுரைகள் எழுதியவர். 

இவர்பற்றி சிட்னியில் வதியும் எழுத்தாளரும் வானொலி ஊடகவியலாளருமான திரு. கானா. பிரபா நினைவுரையாற்றுவார்.

அவுஸ்திரேலியா  மெல்பனில் ஒன்றியத்தமிழர் தோழமை என்ற அமைப்பினை தொடக்கியவரும்,  தமிழ் உலகம் Tamil World ஆகிய பத்திரிகைகளின் நிருவாக ஆசிரியராக விளங்கியவருமான மருத்துவர் பொன். சத்தியநாதன், தீவிர தமிழ்ப்பற்றாளர்.

கணினியில் தமிழ் உருபுகள் தொடர்பாக ஆய்வுகளையும் மேற்கொண்ட சத்தியநாதன், சிறந்த சமூகப்பணியாளராகவும் விளங்கியவர்.

விக்ரோரியா ஈழத்தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவரான சத்தியநாதன் பற்றி திரு.  நவரத்தினம் இளங்கோ உரையாற்றுவார். 

எழுத்தாளரும், சமூகப்பணியாளருமான திருமதி அருண். விஜயராணி,  அவுஸ்திரேலியா தமிழர் ஒன்றியத்தின் வெளியீடான அவுஸ்திரேலியா முரசு இதழின் ஆசிரியராகவும் இயங்கியவர். கன்னிகா தானங்கள் நூலுருவில் வெளிவந்த இவரது முதல் கதைத் தொகுதி.  

அருண். விஜயராணியின் சிறுகதைகள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது சிறுகதைகள், நாடகங்கள், ஒலிச்சித்திரங்கள் என்பனவும் வான் அலைகளில் பரவியுள்ளன.

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கை மாணவர் கல்வி நிதியம் ஆகியனவற்றிலும் தலைவராக பணியாற்றியவர்.

அருண். விஜயராணி பற்றிய நினைவுரையை மெல்பன் பல்கலைக்கழக மாணவி செல்வி  மோஷிகா பிரேமதாச  நிகழ்த்துவார்.

விக்ரோரியா தமிழ்ச்சங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு முதலானவற்றில் அங்கம் வகித்து பல்வேறு தமிழர் உரிமைப்போராட்டங்களில்  முன்னணி வகித்தவரும் எழுத்தாளருமான சண்முகம் சபேசன் அவர்கள் மெல்பன் 3 C R  வானொலி தமிழ்க்குரலில் கால் நூற்றாண்டு காலம் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் செய்தியாளராகவும் பணியாற்றியவர்.

ஏராளமான அரசியல் விமர்சன ஆய்வுக்கட்டுரைகளை எழுதி  3 C R  வானொலி தமிழ்க்குரலில் ஒலிபரப்பியிருக்கும் சண்முகம்   சபேசனின் பல கட்டுரைகள் ஆங்கிலத்தில் Tamil Nation ஊடகத்திலும் வெளிவந்துள்ளன.

சண்முகம் சபேசன் எழுதியிருக்கும் காற்றில்  தவழ்ந்த சிந்தனைகள் நூல் மெல்பனில் விரைவில் வெளியிடப்படவிருக்கிறது.  

சண்முகம் சபேசன் பற்றிய நினைவுரையை அவரது நீண்டகால  நண்பரும்  சமூகப்பணியாளருமான திரு. என். விவேகானந்தன் நிகழ்த்துவார்.

 இவ்வரங்கில் பேசப்படவிருக்கும் ஆளுமைகளின் குடும்ப உறவுகள், நண்பர்கள், மற்றும் கலை, இலக்கியம், இதழியல், கல்வி, வானொலி, தன்னார்வத்தொண்டு முதலான துறைகளில் ஈடுபடும் அன்பர்கள்,  உயர் வகுப்பில் தமிழையும் ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்கள், மற்றும் தமிழ் ஆசிரியர்களையும் இந்த இணையவழி  நினைவு அரங்கில் இணைந்துகொள்ளுமாறு அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அன்புடன் அழைக்கின்றது.

இணைவழி விபரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 


Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/88334290335?pwd=dlBDWHZDNXRVQVoybXJyVTEzM2g5Zz09

Meeting ID: 883 3429 0335
Passcode: 158352

—-0—-

மின்னஞ்சல் :  atlas25012016@gmail.com 

 இணையத்தளம் :    www.atlasonline.org

இதையும் படிங்க

அமெரிக்க அதிகாரிகள் மற்றும் சில நிறுவனங்கள் மீது சீனா பொருளாதார தடை!

இதற்கு அமெரிக்கா, கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த சூழலில் ஹாங்காங்கில் ஜனநாயகத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூறி ஹாங்காங்கில் உள்ள சீன அதிகாரிகள் பலர் மீது அமெரிக்கா கடந்த வாரம்...

கவிதை | ஊத்தை | ஜெ.கார்த்திக்

ஊரெங்கும் ஓடியாடி விளையாடிவீதிதோரும் புழுதியில் உருண்டுகிடைத்தாயின பல்வகை ஊத்தைகள்!இடைவெளி காணாச் சதைபோர்த்தியகரிய நிறத்துப் பிறவித் தோல்களுக்குமேலும் மேலும்...

ஆப்கான் – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் இலங்கையில்

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இலங்கைக்கு மாற்றப்பட்டுள்ளது.

‘த கபிட்டல் மகாராஜா’ குழுமம் தலைவர் கொரோனா தொற்றால் காலமானார்

'த கபிட்டல் மகாராஜா' குழுமத்தின் தலைவர் ஆர். ராஜமகேந்திரன் இன்று காலமானார். கொழும்பில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையொன்றில சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக...

சர்ச்சை பேச்சு- பங்கு தந்தை ஜார்ஜ் பொன்னையா மதுரையில் கைது

பாரதிய ஜனதாவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பங்குத்தந்தை ஜார்ஜ் பொன்னையா மீது அருமனை போலீசார் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்புச் செய்திகள்

அயர்லாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரை கைப்பற்றியது தென்னாபிரிக்கா!

அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரை 3-0 என்ற அடிப்படையில் தென்னாபிரிக்கா அணி கைப்பற்றியுள்ளது. பெல்ஃபாஸ்டில் இடம்பெற்ற இந்தப் போட்டியில்,...

அமெரிக்க அதிகாரிகள் மற்றும் சில நிறுவனங்கள் மீது சீனா பொருளாதார தடை!

இதற்கு அமெரிக்கா, கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த சூழலில் ஹாங்காங்கில் ஜனநாயகத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூறி ஹாங்காங்கில் உள்ள சீன அதிகாரிகள் பலர் மீது அமெரிக்கா கடந்த வாரம்...

ஆக்ஸிமீட்டர் அவசியத்தை அறிந்து கொள்ளுங்கள்…!

உடலில் ஆக்சிஜன் அளவு குறைவது கொரோனா வைரஸ் தொற்றுக்கான பொதுவான அறிகளில் ஒன்றாக அமைந்திருக்கிறது. அதைத்தொடர்ந்து ரத்தத்தில் கலந்திருக்கும் ஆக்சிஜன் அளவை கண்டறியும் ‘பிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்’ எனும் கையடக்க...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒற்றையர் பிரிவு ஆட்டத்திலிருந்து விலகினார் ஆண்டி முர்ரே

இரண்டு முறை நடப்பு சாம்பியனான ஆண்டி முர்ரே டோக்கியோ ஒலிம்பிக்கின் ஒற்றையர் டென்னிஸ் பிரிவிலிருந்து விலகியுள்ளார். ஒலிம்பிக் 2020 ஆட்டங்கள்...

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதலில் 33 தலிபான்கள் பலி

ஆப்கானிஸ்தான் படைகள் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான தாக்குதலை தலிபான்கள் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் ராணுவம் வான்வழித் தாக்குதலை ஒருவார காலமாக நடத்துகிறது.

நான்கல்ல நாற்பது திருமணமும் செய்வேன்! – வனிதா அதிரடி

பவர்ஸ்டார் சீனிவாசனுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் குறித்து நடிகை வனிதா விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார். இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற நடிகை வனிதா,...

மேலும் பதிவுகள்

டெல்டா பிளஸ் கொரோனாத் தொற்றிலிருந்து தடுப்பூசிகள் பாதுகாப்பு அளிக்குமா ?

கொரோனா வைரஸில் டெல்டா வகை வைரஸ், டெல்டா பிளஸ் என்று உருமாற்றம் நிகழ்ந்துள்ளதாலும், அவை மேலும் உருமாற்றம் பெற்று  மூன்றாவது அலையில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என சுகாதாரத்துறையினரால் எதிர்பார்க்கப்படுகிறது. 

கருச்சிதைவிற்கு பிறகு கவனத்தில் கொள்ள வேண்டியவை

கருச்சிதைவின் போது அதிக ரத்தப்போக்கு, இரும்பு சத்து இழப்பு, வைட்டமின் குறைபாடு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். அதனை ஈடு செய்ய உணவு பழக்கவழக்கத்தில்...

அறிமுக போட்டியிலேயே இஷான் கிஷனின் தனித்துவமான சாதனை

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியின் போது இஷான் கிஷன் அதிக ஈடுபாட்டினை வெளிப்படுத்தியுள்ளார்.

வெளிநாடு வாழ் தமிழர் நல துறையை அமைக்க வேண்டும்: மு க ஸ்டாலின்

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் நலன் காத்திட வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை என்ற புதிய துறையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு...

பிச்சைக்காரன் 2 படத்தில் விஜய் ஆண்டனி திடீர் மாற்றம்!

பிச்சைக்காரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து உருவாக இருக்கும் 2வது பாகத்தில் திடீர் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறார் விஜய் ஆண்டனி. சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி...

பிந்திய செய்திகள்

அயர்லாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரை கைப்பற்றியது தென்னாபிரிக்கா!

அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரை 3-0 என்ற அடிப்படையில் தென்னாபிரிக்கா அணி கைப்பற்றியுள்ளது. பெல்ஃபாஸ்டில் இடம்பெற்ற இந்தப் போட்டியில்,...

அமெரிக்க அதிகாரிகள் மற்றும் சில நிறுவனங்கள் மீது சீனா பொருளாதார தடை!

இதற்கு அமெரிக்கா, கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த சூழலில் ஹாங்காங்கில் ஜனநாயகத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூறி ஹாங்காங்கில் உள்ள சீன அதிகாரிகள் பலர் மீது அமெரிக்கா கடந்த வாரம்...

ஆக்ஸிமீட்டர் அவசியத்தை அறிந்து கொள்ளுங்கள்…!

உடலில் ஆக்சிஜன் அளவு குறைவது கொரோனா வைரஸ் தொற்றுக்கான பொதுவான அறிகளில் ஒன்றாக அமைந்திருக்கிறது. அதைத்தொடர்ந்து ரத்தத்தில் கலந்திருக்கும் ஆக்சிஜன் அளவை கண்டறியும் ‘பிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்’ எனும் கையடக்க...

செட்டி நாட்டு அவியல்!

தேவையானவை:கத்தரிக்காய் - 100 கிராம்,உருளைக்கிழங்கு - 2,வெங்காயம்,தக்காளி - தலா 1,பட்டை - சிறிய துண்டு,எண்ணெய் - தேவையான அளவு,உப்பு - தேவைக்கு. அரைக்க:தேங்காய்த்துருவல் -...

கவிதை | ஊத்தை | ஜெ.கார்த்திக்

ஊரெங்கும் ஓடியாடி விளையாடிவீதிதோரும் புழுதியில் உருண்டுகிடைத்தாயின பல்வகை ஊத்தைகள்!இடைவெளி காணாச் சதைபோர்த்தியகரிய நிறத்துப் பிறவித் தோல்களுக்குமேலும் மேலும்...

துயர் பகிர்வு