Monday, May 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் பாலு மகேந்திரா நூலக 3ஆம் ஆண்டு ஆரம்ப விழா

பாலு மகேந்திரா நூலக 3ஆம் ஆண்டு ஆரம்ப விழா

9 minutes read

பாலு மகேந்திரா நூலகத்தின் மூன்றாம் ஆண்டு ஆரம்ப விழா நிகழ்வு 30.10.2022 அன்று பிற்பகல் 2 மணி தொடக்கம் 4.30 மணி வரை கிளிநொச்சியில் அமைந்துள்ள பாலு மகேந்திரா நூலகத்தில் நடைபெற்றிருந்தது.

இந் நிகழ்வில் சென்ற வருடம் (2021) பாலு மகேந்திரா நூலகத்தால் நடாத்தப்பட்ட சிறுகதைப்போட்டியில் வெற்றிபெற்ற சிறுகதைகள் “எங்கட கதைகள் – தொகுப்பு 01” ஆக வெளியிடப்பட்டதுடன், நூலகத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் (2022) வெற்றிபெற்ற எழுத்தாளர்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டு அவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சிவஞானம் சிறிதரன் அவர்கள் பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறை பேராசிரியர் திரு. சிவசுப்பிரமணியம் ரகுராம் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்திருந்தனர். இந் நிகழ்வினை பாலு மகேந்திரா நூலகத்தின் தலைவர் கம்ஜினி ஜனார்த்தன் அவர்கள் தலைமையேற்று நடாத்தியதுடன், செல்வன் லம்போ கண்ணதாசன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

மேலும் இந் நிகழ்வில் “எங்கட புத்தகங்கள்” பதிப்பகம் சார்பாக திரு.ச.சத்யதேவன் அவர்கள் “எங்கட கதைகள் – தொகுப்பு 01” இன் வெளியீட்டு உரையை நிகழ்த்தியதுடன் ஈழத்திரைச் செயற்பாட்டாளர் திரு. காசிநாதர் ஞானதாஸ் அவர்கள் “ஈழம் சினிமாவில் திரைக்கதையின் முக்கியத்துவமும் ஈழத்தில் கதை சொல்லிகளை உருவாக்க வேண்டிய அவசியமும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அத்துடன் சிறுகதைப் போட்டியின் நடுவர்களுள் ஒருவரான திரு. தீபச்செல்வன் அவர்கள் சிறுகதைப்போட்டியில் நடுவராக கலந்து கொண்ட தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

இந் நிகழ்வின் இறுதியில் நூலகத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் வெற்றிபெற்ற எழுத்தாளர்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி, வெற்றிபெற்றோர் விபரம் கீழ்வருமாறு,
🔶முதலாம் இடம்:
“மலர்” – கேசலா சுந்தரம்பிள்ளை – வவுனியா

🔶இரண்டாம் இடம்:
“வரலாறு இனி மாறுமோ ?” – சா.ஜனனி – யாழ்ப்பாணம்

🔶மூன்றாம் இடம்:
“எதிர்பாராத நேரங்களில் எதிர்பாராத நிகழ்வுகள்” – சுப்பிரமணியம் நவமணி – இரத்தினபுரி

ஆறுதல் பரிசு பெற்ற சிறுகதைகள் அகர வரிசையில்:

🔸”உறவுகள் தொடர்கதை” – மஹின் சுப்பிரமணியம் – கம்பஹா

🔸”ஓர் உயர்மட்ட தீர்மானம்” – அப்தல் வாகிது. முஹ்சீன் – திருகோணமலை

🔸”கருணையில்லா காலம்” – சுவஸ்திகா ராஜ்பிரகாஷ் -கொழும்பு

🔸”கையெழுத்து” – தவராசா செல்வக்குமார் – கிளிநொச்சி

🔸”கொல்லாமற் கொல்கிறீர்கள்” – சிற்றம்பலம் சண்முகநாதன் – முல்லைத்தீவு

🔸”சந்திராக்கா” – இரத்தினம் பிரதீபன் – ஜேர்மனி

🔸”தீராசாபம்” – குமார் சுகுணா – தலவாக்கலை

🔸”பதுங்கு குழி” – பொன் குலேந்திரன் – கனடா

🔸”மரணம் ஈன்ற ஜனனம்” – சுதாமா செல்வரெட்ணம் – மட்டக்களப்பு

🔸”மருதாயி” – மதிவதனி குருச்சந்திரநாதன் – யாழ்ப்பாணம்

🔸”வயிறு” – தங்கராசா இராஜராயேஸ்வரி – யாழ்ப்பாணம்

இச் சிறுகதைப்போட்டியின் நடுவர்களாக எழுத்தாளர்களான திருமதி. தாட்சாயணி, திரு. தீபச்செல்வன் மற்றும் திரு. வாசு முருகவேல் ஆகியோர் பணியாற்றியிருந்தனர்.

இச் சிறுகதைப் போட்டிக்கு ஈழத்திலிருந்தும் புலம்பெயர் தேசங்களிலிருந்தும் 105 ஈழத்து எழுத்தாளர்களிடமிருந்து (62 ஆண்கள் மற்றும் 43 பெண்கள்) மொத்தம் 135 சிறுகதைகள் கிடைக்கப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இவற்றில் வெற்றிபெற்ற சிறுகதைகள் “எங்கட கதைகள் – தொகுப்பு 02” ஆக அடுத்த வருடம் வெளியிடப்படும் அன்பதனை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்.

இவ்வண்ணம்,
நிர்வாகம்,
பாலு மகேந்திரா திரைப்பட நூலகம் மற்றும் கற்கை வள நிலையம்
01.11.2022

BaluMahendraLibrary #EelamCinema #kilinochchi

EelamStories #எங்கடகதைகள் #எங்கடபுத்தகங்கள்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More