December 7, 2023 12:08 am

வவுனியா நகரசபை பொது நூலகத்தில் புத்தகக்கொண்டாட்டம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வவுனியா நகரசபை பொது நூலகமும் பண்டாரவன்னியன் புத்தகசாலையும் இணைந்து நடாத்தும் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது.

பண்டாரவன்னியன் புத்தகசாலையினால் நடாத்தப்படவுள்ள இந்தப் புத்தகக் கண்காட்சியானது எதிர்வரும் 09,10ஆம் திகதிகளில் வவுனியா நகரசபை பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. இரண்டு தினங்களும் காலை 08 மணிமுதல் மாலை 05.30 மணிவரை இந்நிகழ்வு நடைபெறும். மேலும் இவ்விருதினங்களிலும் புத்தக அறிமுக நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

ஈழத்து எழுத்தாளர்கள் மற்றும் துறை சார்ந்த எழுத்தாளர்களின் ஆக்கப் படைப்புகளாகிய பல்வேறு நூல்களும் இக்கண்காட்சியில் இடம்பெறவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்