
எமக்கோ குந்தி
இருக்க ஒரு முழ
நிலம் கூட இல்லை
எமக்கு முன்னும் பின்னும்
அருகிலும் பக்கத்திலும்
புத்தரின் வேர்கள்
முளைத்து விட்டன
இப்போது எல்லாம்
சப்பாத்து கால்களின்
சத்தங்கள் தான்
நிலம் முழுக்க
நிரம்பிக் கிடக்கின்றன
உதைபடும் நிலங்கள்
மௌனமாக அழுதுகொண்டு
இருப்பதை
யார் தான் அறிவர் .