அப்பா | கவிதை

 

கோபக்காரராக

குடிகாரராக

முரட்டு மனிதராக,

பொறுப்பில்லாதவராகவே

பார்த்துப் பழகிய அப்பா,

அம்மாவை உடல் நலம்

சரியில்லாமல்

மருத்துவமனையில் சேர்த்த

அன்று,

அம்மாவின் கால்களுக்கு

பக்கத்தில் அமர்ந்து கொண்டு

சிந்திய

ஒவ்வொரு துளிக்கண்ணீரிலும்

காணாமல் போயிருந்தது…

அப்பாவை பற்றிய

எல்லா அவப்பெயர்களும்!

 

நன்றி : மு.முபாரக், வாளாடி | தேன்சிட்டு

ஆசிரியர்