தலை வணங்கும் வல் நெஞ்சம் | கேசுதன்

எழுதப்பட்ட விதிகளுக்கு அப்பால்
எழுதப்படாத குரோதம் தங்கிய உணர்வலைகள்
சிக்கிய சிலையும் சின்னாபின்னமாகின

வலுவிழந்த மனங்களை தாக்கிய
தெள்ளிய வாய்களும் வலியுணராது
மீட்டிட முடியா நினைவுகளை சுமந்தபடி

பிதற்றிய வாய்களை வகுத்தபடி வாழ்க்கை
காலம் கடந்த நினைவுகள் செய்வதென்னவோ நியாபகங்கள்

உளறி வாய்தனை பெருவிளக்காய்
ஏற்றிய மனங்கள் படும்பாடு
யாரறிவாரோ

உருமாறிய மனங்களை
சூறையாடிய வஞ்சக நெஞ்சம்
குள்ளநரியாய் குதித்து தடுமாறியது

தாங்கி நிமிர்த்திட துணையறியா
துடித்ததென்னவோ
ஓராயிரம் பலவண்ணம் படர்ந்த
பூக்களிலும் முட்கள் தானே

ஆனாலும் முட்களின் நடுவே
சிறுந்தூர இடைவெளிகள்
உண்டல்லவோ

வகுக்கபடாத மூடர் நெஞ்சங்களுக்கு
நடுவிலும் முட்கள் தொடரா இடைவெளிகளும்
உண்டென்னவோ

வலிகளை உணரும் யதார்த்தம் கண்டு நெகிழும்
நெஞ்சமும் வல்நெஞ்சங்களை
கறை கழுவும் பதுமம்தான் இறை நெஞ்சம்
இது கண்டு
தலை வணங்கும் வல்நெஞ்சம்

ஆசிரியர்