December 6, 2023 3:12 pm

சுடரியின் சொற்கள் | S.சுடர் நிலா

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஓரமாக இருந்தது
ஒரு மின்கம்பம் அதில்
ஒளியிழந்த நிலவோடு
ஒப்பந்தம் செய்துகொண்ட மின்விளக்கொன்று..

தூரத்தில் சிணுங்கும் சிறு வண்டுகள்
சில்லென்று
வீசும் காற்று…
இவற்றிடையே
சலனமற்ற இரவைச் சீரழித்து
சலசலத்து நிற்கும் வேம்பு…
அதன் அருகே நான்

சிரிக்கிறேன்…
உரத்துச் சிரிக்கிறேன்..
உயரப் பறக்கிறேன்
பின்பு ஊமை ஆகிறேன்..
இனிக்கின்றன ..
கிள்ளி மென்ற வேப்பிலைகள்…..

விழித்துக் கொண்டேன்…
இப்போது
கசப்பு ஒட்டி நிற்கும் என் உதடுகளை பார்த்து..
பல்லிழித்துச் சிரித்துக்கொண்டிருந்தன
விழுந்து பரம்பிக்கிடந்த
வேப்பம் விதைகள்…

கவிஞர் S.சுடர் நிலா

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்