Sunday, May 12, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் மன அழுத்தம் குறைக்கும் பிரியாணி இலை!

மன அழுத்தம் குறைக்கும் பிரியாணி இலை!

1 minutes read

பிரியாணி இலையை நறுமணத்திற்காக உணவில் சேர்க்கிறோம். இந்த இலைகளில் எண்ணற்ற குணங்களும் இருக்கின்றன.

*பிரியாணி இலைகளில் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் மற்றும் கனிம சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், காப்பர், செலினியம், மாங்கனீசு, இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளன.

*இதில் உள்ள ஆன்டி பாக்டீரியல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பல பிரச்னைகளுக்கு மருந்தாகிறது.

*பிரியாணி இலைகளில் உள்ள இன்டர்லியூகின் என்ற புரதச்சத்து அழற்சி மற்றும் சுவாசப் பிரச்னைகளைத் தீர்க்கும்.

*பிரியாணி இலையை வீட்டினுள் எரித்து அதன் நறுமணத்தை சுவாசிக்க மனஅழுத்தம் குறைவதுடன் வீட்டில் நேர்மறை ஆற்றல்களை உண்டாக்கும்.

*இதன் நறுமணம் அரோமா தெரபிகளில் சருமம், சுவாசப் பிரச்னை சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகிறது.

*பிரியாணி இலையில் உள்ள காஃபிக் அமிலமும் ரூடின் என்ற பொருளும் இதயத்தில் உள்ள ரத்தக்குழாய்களை வலுப்பெறச் செய்கின்றன. மேலும் கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கும்.

*இதன் இலையிலிருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்தால் மூட்டுவலி, தலைவலி நீங்கும்.

*புற்றுநோய் எதிர்ப்பு பொருட்களான காஃபிக் அமிலம், யூஜினால் மற்றும் க்யூயர்சிடின் உள்ளதால் புற்றுநோய் வராமல் தடுக்கும். நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றலும் இதற்கு உண்டு.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More