Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் பிரசவத்தின் பின் எடையால் அவதி படுபவரா நீங்கள்

பிரசவத்தின் பின் எடையால் அவதி படுபவரா நீங்கள்

6 minutes read

சாதாரணமாக, குழந்தை பிறந்த பின் பெண்களுக்கு உடல் எடை அதிகரிப்பது இயல்பானதே. பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உடல் எடை அதிகரித்துக் கொண்டேபோகும். குழந்தை பிறந்த பின், அந்த எடை சிறிது குறைந்தாலும், முற்றிலுமாக பிரசவத்திற்கு முன்பிருந்த எடையைப் பெறுவது சிலருக்கு முடியாமல் போகலாம். இதனால் உடல் பருமனாக தோன்றும்.

ஆனால் ஒரு சிலருக்கு, உடல் எடை இயல்பாகவே எந்த முயற்சியுமின்றி மெல்லிய தோற்றத்தை பெறுவார்கள். இதற்கு மரபு சம்பந்தமான காரணங்களும் இருக்கலாம் அல்லது அந்த தனி நபரின் உடல்வாகைப் பொருத்தும் இருக்கலாம். எப்படி இருந்தாலும், பெண்களுக்கு உடல் எடை அதிகரிப்பது என்பது நிச்சயம் ஒரு பெரிய சவாலாகவே இருக்கும். உடல் எடையானது அதிகரிக்கும்போது அவர்களால் சில வேலைகளை சரியாக செய்ய முடியாமல் போகலாம். மேலும் வேகமாக செயல்பட முடியாமல் போகலாம். ஆகவே, உணவில் அதிகக் கட்டுப்பாட்டையும் கொண்டுவர நினைப்பார்கள். இறுதியில், அதிக உடல் எடை அவர்களை மன ரீதியாகவும் பாதிக்கக் கூடும். இந்த மாதிரியான சங்கடங்களை குறைக்க, பிரசவத்திற்கு பின் பெண்கள் உடல் எடையை குறைக்க முயற்சி செய்வது எதார்த்தமானதே.

உடல் எடையை குறைக்க பெண்களுக்கென்றே பல உடற்பயிற்சிகள் உள்ளது. இது மட்டுமல்லாது, பல யோகாசனங்களும் உள்ளது. உடற்பயிற்சியை விட, யோகாசனம் செய்யும் போது, மனமும், எண்ணங்களும் சேர்ந்து அமைதி பெறுகின்றது. மேலும் யோகா செய்யும் போது மூச்சு பயிற்சியும் சேர்ந்தே செய்வதால் நல்ல ஆரோக்கியம் அதிகரிக்கும். இதனாலேயே, இன்று பெரும்பாலான பெண்கள் பிரசவத்திற்கு பின் உடல் எடையை குறைக்க யோகாசனம் செய்ய ஆர்வம் காட்டுகின்றார்கள்..

பிரசவத்திற்கு பின் யோகா செய்வதன் பலன்கள் (Benefits of yoga after Delivery in Tamil)

பிரசவ காலத்தில் பெண்களுக்கு உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். மேலும் அவர்கள் உடல் தோற்றத்திலும் பல மாற்றங்கள் ஏற்படும். அவற்றைப்போக்கி, இயல்பான நல்ல தோற்றத்தைப் பெற யோகா உதவும்.

உடல் எடையை குறைக்க யோகா ஒரு நல்ல தேர்வாக இருக்கும். ஒரு சில யோகாசனங்கள், விரைவாகவும், எளிதாகவும் உடல் எடையை குறைக்க உதவுகின்றது.

பிரசவத்திற்கு பின் ஏற்படும் உடலின் தளர்ச்சியைப் போக்க யோகா உதவும். குறிப்பாக உடலில் சக்தி இல்லாமல் இருப்பது, மூட்டு வலி, அதிக சோர்வு போன்ற பிரச்சனைகளை தீர்க்க இது உதவும்.

நல்ல உடல் அமைப்பை பெற உதவும். ஆங்காங்கே உடலில் தோன்றி இருக்கும் தேவையற்ற சதைகளை அகற்றி, கொழுப்பைக் குறைத்து, நல்ல இளமையான தோற்றத்தைப் பெற உதவும்.

மனம் அமைதி பெரும். கர்ப்ப காலத்திலும், பிரசவ நேரத்திலும் பெண்கள் பல மன ரீதியான பிரச்சனைகளை சந்தித்து இருந்திருப்பார்கள். அவற்றை போக்கி, அமைதியான மற்றும் மகிழ்ச்சியான மன நிலையை பெற யோகா உதவுகின்றது.

பிரசவத்திற்கு பின் எப்போதிருந்து யோகா செய்யலாம்? (from when can a women start doing yoga after delivery)

குழந்தை பிறந்த உடனே பெண்கள் யோகா மற்றும் உடற்பயிற்சியை தொடங்கிவிடக் கூடாது. குறிப்பாக குறைந்தது 3 மாதங்களாவது அவர்களுக்கு நல்ல ஓய்வு தேவை. சுக பிரசவம் ஏற்பட்டிருந்தால் பெண்கள் ஒன்று அல்லது இரண்டு மாதங்களிலேயே யோகா செய்ய தொடங்கி விடலாம். அதிலும் ஒரு சில பெண்கள் வெகு விரைவாகவே இயல்பு நிலைக்கு, நல்ல ஆரோக்கியத்தோடு திரும்பி விடுவார்கள். சொல்லப்போனால், இரண்டு அல்லது மூன்று வாரங்களிலேயே, சுக பிரசவம் ஏற்பட்ட பெண்கள் வீட்டு வேலைகளை செய்யத் தொடங்குவதோடு, மற்ற இயல்பான வேலைகளையும் செய்யத் தொடங்கி விடுகின்றார்கள். மேலும் தன் குழந்தையையும் அவர்களே பார்த்துக் கொள்ளும் அளவிற்கு ஆரோக்கியத்தை பெற்று விடுகின்றனர்.

எனினும், இந்த நிலை அறுவைசிகிச்சை செய்த பெண்களுக்கு இல்லை. பொதுவாக பிரசவத்திற்கு அறுவைசிகிச்சை செய்து கொண்ட பெண்கள் குறைந்தது 6 மாத காலத்தில் இருந்து ஒரு வருட காலம் வரை ஓய்வு எடுக்க வேண்டும். அவர்கள் பெரிதாக எந்த வீட்டு வேலைகளிலும் ஈடுபடக் கூடாது மேலும் அதிக எடையுள்ள பொருட்களைத் தூக்கவே கூடாது. இதனால் அவர்களால் குழந்தையோடு நெருக்கமாக இருக்கும் வாய்ப்பும் குறையும். எனவே குழந்தை பிறந்ததில் இருந்து சில மாதங்கள் கழித்தே அவர்கள் யோகாசனம் செய்ய ஆரம்பிக்கவேண்டும்.

இது மட்டுமல்லாது, சுக பிரசவம் ஏற்பட்ட பெண்கள், ஒரு சில குறிப்பிட்ட யோகா பயிற்சிகளைத் தவிர அனைத்து விதமான யோகாசனங்களையும் செய்யலாம். அதுவே அறுவைசிகிச்சை பிரசவம் ஏற்பட்ட பெண்கள், சில குறிப்பிட்ட யோகாசனங்களை மட்டுமே செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால், அவர்களுக்கு உடலில் வேறு சில பிரச்சணைகள் ஏற்படலாம். ஆகவே நிபுணரின் ஆலோசனைப் படியும், உதவியோடும் சரியான யோகாசனத்தை செய்தால், விரைவில் நல்ல உடல் வாகை பெற்று, உடல் எடையையும் குறைக்கலாம்.

பிரசவத்திற்கு பின் பெண்கள் செய்ய சில பொதுவான யோகாசனங்கள் (Common yoga steps or asanas for women after delivery in Tamil)

வியக்ராசனம் (Tiger Pose)

  • இந்த ஆசனத்தில், இரண்டு கால்கள் மற்றும் கைகளை தரையில் படும்படி வைக்க வேண்டும்.
  • ஒரு காலை சறுக்கு நிலையில் வைக்கவும். முட்டிக்காலை மடக்கி வைத்த படி, மேல் உடல் முன்னும் பின்னுமாக மடக்கவும்.
  • அதன் பின் காலை நேராக நீட்டி மடங்கிய நிலைக்கு மீண்டும் கொண்டு வரவும்.
  • இப்போது மற்றொரு காலை இது போன்று செய்ய வேண்டும்.
  • இப்படியே 1௦ முறை செய்ய வேண்டும்.
  • இது அடி வயிற்று பகுதியில் இருக்கும் கொழுப்பை குறைக்க உதவும்.

புஜங்காசனம் (Cobra Pose)

  • இந்த ஆசனாவை செய்வதால் முதுகு வலி ஏற்படுவதை தவிர்க்கலாம். மேலும் இது உடல் எடையை குறைக்கவும் உதவும். உங்கள் முதுகு தண்டையும் பலப்படுத்தும்.
  • இரண்டு கைகள் மற்றும் கால்களை தரையில் வைத்து, தலை கீழே பார்த்தபடி உடல் முழுவதும் முக்கோண வடிவில் வரும்படி குனிந்து நிற்க வேண்டும்.
  • அப்படியே குப்பற படுத்தது போல தரையில் தட்டையாக உடல் முற்றிலும் பதியும் படி படுக்கவேண்டும்
  • இப்போது மெதுவாக இரண்டு கைகளையும் அப்படியே தரையில் ஊன்றி முதுகுத்தண்டை பின் வலைத்தவாறு அடி வயிறு வரை தலையை நேராக பார்த்த படி எழ வேண்டும்.
  • இது பார்பதற்கு நாகப் பாம்பு படம் எடுப்பது போன்று தோற்றம் தரும்.
  • இப்படி சில வினாடிகள் இருந்துவிட்டு, மீண்டும் முன் தொடங்கிய முக்கோண வடிவத்திற்கு திரும்ப வேண்டும்.
  • இப்படியே 1௦ முறை செய்ய வேண்டும்.

உத்தாசனம் (Standing forward bend)

  • இந்த ஆசனத்தில் நேராக முதலில் நிற்க வேண்டும்.
  • அதன் பின் உங்கள் இரண்டு கைகளையும், கால்களையும் ஒன்றாக சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • இரண்டு கைகளும் உங்கள் கால்களை தொடவேண்டும்.
  • முட்டிக்கால் மடங்காமல் இதனை செய்ய வேண்டும்.
  • முதுகை நன்கு முன் வளைத்து செய்ய வேண்டும்.
  • இப்படி சில வினாடிகள் இருந்து விட்டு மீண்டும் நிமிர்ந்து நேரான நிலைக்கு வரவேண்டும்.
  • இப்படி 1௦ முறை செய்ய வேண்டும்.

நவாசனம் (Boat Pose)

  • இந்த யோகாசனம் செய்யும் போது உங்கள் உடல் படகு போல தோற்றம் தரும்.
  • தரையில் விண்ணை பார்த்த படி படுக்க வேண்டும்.
  • முதுகு தண்டு நேராக இருக்கவேண்டும்.
  • கால்கள் நேராக நீட்டி வைக்கவேண்டும்
  • இப்போது விண்ணை பார்த்த படி பாதங்களை மேலே உயர்த்த வேண்டும்.
  • கைகளையும் சேர்த்து கால்களுக்கு நேராக சமமாக உயர்த்த வேண்டும்.
  • உங்கள் கால் விரல்களும், கை விரல்களும் ஒரே நேர் கோட்டில் இருக்கும்படி வைக்க வேண்டும்.
  • இந்த நிலையில் சில வினாடிகள் நீங்கள் இருக்கும் போது உங்கள் அடி வயிற்றில் தசைகள் இறுக்கம் அடைவதை நீங்கள் உணரலாம்.
  • இந்த ஆசனாவை 1௦ முதல் 2௦ முறை செய்ய வேண்டும்.

உஷ்தராசனம் (Camel Pose)

  • இந்த ஆசனாவை செய்யும் போது உங்கள் உடல் முற்றிலுமாக பின் பக்கம் வளைய வேண்டும்.
  • வஜ்ராசனத்தில் அமர்ந்து கொள்ள வேண்டும்.
  • மெதுவாக உங்கள் உடலை உயர்த்தி முட்டிக்காலில் அமர வேண்டும்.
  • இப்பொது உங்கள் மொத்த உடல் எடையும் முட்டிகாலில் இருக்கும்.
  • உங்கள் தலையை மெதுவாக பின் பக்கமாக வளைத்து உங்கள் இரு கைகளும் பின் பக்கமாக குதிங்கால்களை பிடித்தவாரே தொடவேண்டும்.
  • இப்படி செய்யும் போது உங்கள் வயிற்றுப் பகுதி நன்கு விரிவடைவது போலத் தோன்றும்.

இது மட்டுமல்லாமல் மேலும் சில யோகா பயிற்சிகள் பெண்கள் பிரசவத்திற்கு பின் உடல் எடையை குறைக்க உதவுகின்றது. எனினும், நீங்கள் ஒரு நல்ல யோகா ஆசிரியரின் உதவியைப்பெற்று முறையாக பயிற்சி செய்துவரும்போது, உங்களுக்கு அதிக அளவு நன்மை கிடைக்கும். மேலும் விரைவாகவும் உங்கள் உடல் எடை குறையும்.

-நன்றி ஆரோக்கிய இதழ் –

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More