கொரோனாவுக்கு பின் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள்

உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை மீட்டெடுப்பதற்கும், உங்கள் வலிமையை மீட்டெடுப்பதற்கும், நீங்கள் கோவிட்டில் இருந்து மீண்ட பிறகு சரியான உணவு முறை முக்கியமானது.

போஸ்ட்-கோவிட் நோய் மீட்டெழுதல் சிலருக்கு சில நாட்களும் மற்றவர்ளுக்கு சில மாதங்களும் ஆகலாம். தொண்டை புண், இருமல், மூச்சு திணறல், தசை வலி, மூட்டு வலி, மன குழப்பம், தூக்கமின்மை, மன அழுத்தம் அல்லது பதட்டம் ஆகியவை கோவிட்டில் இருந்து மீண்ட பிறகு பல பேர் எதிர்கொள்ளும் சிக்கல்கள். சோர்வு என்பது கோவிட் உட்பட வைரஸ் தொற்றுக்கான பொதுவான அறிகுறியாகும்.

உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை மீட்டெடுப்பதற்கும், உங்கள் வலிமையை மீட்டெடுப்பதற்கும், நீங்கள் கோவிட்டில் இருந்து மீண்ட பிறகு சரியான உணவு முறை முக்கியமானது.

உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கு முன், கோவிட் மற்றும் பிந்தைய காலத்தில் நீரேற்றம் மிக அவசியம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். நோய்த்தொற்றின் போது மற்றும் அதற்குப் பிறகு திரவ இழப்பு பல வழிகளில் ஏற்படுவதால் நீரிழப்பு பொதுவானது.

நம் உடலில் உள்ள அனைத்து செல்கள், திசுக்கள் மற்றும் தசைகளுக்கு தண்ணீர் தேவை, இது நச்சுகளை வெளியேற்றி, வீக்கத்தை குறைத்து, இரத்த அழுத்தத்தை சாதாரணமாக வைக்க உதவுகிறது. நாள் முழுவதும் உங்கள் உடல் நீரேற்றமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள கிரீன் டீ, எலுமிச்சை சாறு, மோர் போன்ற திரவங்கள் மற்றும் நீர் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும்.

நீங்கள் கோவிட்டில் இருந்து மீண்ட பிறகு உங்கள் எல்லா உணவிலும் புரதம் மிக முக்கியமான பகுதியாக இருக்க வேண்டும்.

புரதம் உடலின் தசைகளை நிரப்புகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. அமினோ அமிலங்கள் புரதத்தை உருவாக்கும் கரிம சேர்மங்கள் மற்றும் சில அத்தியாவசிய அமினோ அமிலங்கள் நம் உணவில் இருந்து மட்டுமே கிடைக்கும். நல்ல தரம் மற்றும் புரதத்தின் அளவை கவனத்துடன் உட்கொள்ள வேண்டும்.

அசைவம் சாப்பிடுபவர்களுக்கு, முட்டை, கோழி, இறைச்சி, மீன் போன்றவை சில புரத ஆதாரங்கள் மற்றும் சைவ உணவு உண்பவர்களுக்கு, பன்னீர், பருப்பு, கடலை, மற்றும் தானிய வகைகள் நல்ல புரத ஆதாரமாக இருக்கும்.

வைட்டமின் சி, டி, மற்றும் மெக்னீசியம், ஜின்க், செலினியம் போன்ற தாதுக்கள் கோவிட் நோய் மீட்பு காலத்திற்குப் பிறகு மிகவும் முக்கியம்.

1. எலுமிச்சை நீரில் உப்பு சேர்த்தால் வைட்டமின் சி மற்றும் உடலுக்கு நீர்ச்சத்து கிடைக்கும். நெல்லிக்காய் வைட்டமின் சி -யின் நல்ல ஆதாரமாக இருக்கிறது.

2. வைட்டமின் டி உடலில் ஹார்மோனாக செயல்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி, எலும்பு மற்றும் தசை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

3. வைட்டமின் டி யின் சில உணவு ஆதாரங்களில் காட் லிவர் ஆயில், சால்மன், காளான், முழு முட்டை போன்றவை அடங்கும். ஆனால் நாம் அனைவரும் அறிந்தபடி, சூரிய ஒளிதான் வைட்டமின் டி.யின் சிறந்த ஆதாரம்.

4. மெக்னீசியம் ஒரு முக்கியமான கனிமமாகும், இது உடலில் நூற்றுக்கணக்கான வெவ்வேறு செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. நரம்புகள் மற்றும் தசை செயல்பாடுகளுக்கு இது அவசியம். மெக்னீசியம் இருதய நோய்களிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் இதய செயல்பாட்டை ஒழுங்குபடுத்துகிறது.

5. மெக்னீசியம் நிறைந்த உணவுகள் கோவிட்டின் சில பக்க விளைவுகளான மனச்சோர்வு மற்றும் பதட்டத்தை போக்க உதவும்.

6. துத்தநாகம்(zinc) ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைத் தடுக்கிறது மற்றும் நிமோனியா அபாயத்தைக் குறைக்கிறது. நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க இந்த கனிமங்களின்(minerals) சரியான சமநிலை எடுக்கப்பட வேண்டும்.

7. செலினியம் ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும் மற்றும் இது உடலின் நோயெதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்கும். செலினியம் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் அறிவாற்றல் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.

இந்த கனிம உட்கொள்ளலை மேம்படுத்த நீங்கள் உட்கொள்ளக்கூடிய சில உணவுகளில் கீரை, முட்டை, வெண்ணெய், தானிய வகைகள், டார்க் சாக்லேட் (70% அல்லது அதற்கு மேற்பட்டவை), கடல் உணவு, பீன்ஸ், பருப்பு வகைகள் அடங்கும்.

சர்க்கரை உணவுகள் குடலில் இருந்து நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை அகற்றும்.

தயிர், மோர், புளிப்பு ஊறுகாய் போன்ற புரோபயாடிக் உணவுகள் மற்றும் வெங்காயம், பூண்டு, தேங்காய், தக்காளி போன்ற ப்ரீபயாடிக் உணவுகளை தொடர்ந்து உட்கொள்வது உங்கள் குடல் ஆரோக்கியத்திற்கு உதவும்.

அனைத்து சர்க்கரை உணவுகள் மற்றும் கார்போனேட்டட்(carbonated) பானங்களை தவிர்க்கவும். உடலில் அதிக வீக்கத்தை ஏற்படுத்தும் மைதா மற்றும் துரித உணவை உட்கொள்ள வேண்டாம். ஹோட்டல்/வெளிப்புற உணவைத் தவிர்க்கவும். உங்கள் உணவு கீரைகள், பருப்பு, பனீர், முட்டை, இறைச்சி, மீன் போன்ற புரதங்கள், முழு தானியங்கள், சில ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஒரு கப் தயிர் உள்ளிட்ட அதிக காய்கறிகள் இருக்க வேண்டும்.

உடலுக்கு வலிமை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை திரும்பப் பெற ஆரோக்கியமான உணவு முறை, சீரான ஓய்வும் பின்பற்ற வேண்டும். இரவு 7-8 மணிநேரம் தூக்கம் உடல் ஆரோக்கியத்திற்கு அவசியம்.

நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க இந்த தொற்றுநோய்களின் போது உணவின் தரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க உங்கள் உணவு மற்றும் செயல்பாடுகள் குறித்து உங்கள் நாளைத் திட்டமிடுங்கள்.

நல்ல உணவு, சரியான தூக்கம் மற்றும் எளிமையான உடல் செயல்பாடுகள் அனைத்தும் இணைந்து கோவிட்டில் இருந்து மீண்ட பிறகு உங்கள் வலிமையை மீண்டும் பெற உதவும்.

குறிப்பு:
அவரவர் உடல் நிலைக்கு ஏற்ற வண்ணம் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று உணவு உட்கொள்வது சிறந்தது.

பி. சந்தான பிரியதர்ஷ்னி,

ஊட்டச்சத்து நிபுணர்,
மெடால் ப்ளூம்

ஆசிரியர்