Friday, August 12, 2022

இதையும் படிங்க

வறுத்தபூண்டு சாப்பிடுவதால் ஒரே நாளில் இவ்வளவு நன்மைகளா

பூண்டை வறுத்து சாப்பிட்டால் பல உடல் உபாதைகளும் நீங்கிவிடும். வறுத்தபூண்டு ஆன்ஜியோடென்சின் என்னும் ஹார்மோன் உற்பத்தியைத் தடுக்கும். ரத்தநாளங்களை சீராக்கும். 6 வறுத்த...

சளி நெஞ்சு சளி ஆஸ்துமா வீசிங் மூச்சு ஆகியவற்றிற்கான தீர்வுகள்

காலநிலை மாற்றம் வந்தாலே பலரும் அனுபவிக்கும் ஓர் பிரச்சனை தான் சளி, இருமல். குறிப்பாக குளிர்காலம் அல்லது பனி காலத்தில் தான் இப்பிரச்சனைகளால்...

இருமல், இரைப்பு தொல்லையை குணமாக்கும் தூதுவளை சூப்

தேவையான பொருட்கள் : தூதுவளை இலைகள் - 10. பூண்டு - 5 பல்,

காலையில் தேநீர் எப்படி எடுப்பது சிறந்தது

நீங்கள் தேநீர் இல்லாமல் தங்கள் நாளைத் தொடங்க முடியாத ஒருவராக இருந்தால், வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகளைச் சமாளிக்க இந்த எளிய குறிப்புகள் உதவும்.

காலை எழுந்தவுடன் அருந்த கூடியவை

எழுந்தவுடன் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் கருப்பு மிளகு சேர்த்து ஒரு சூடான கப் எலுமிச்சை சாறு குடிக்கலாம். எடை இழப்புக்கு இது ஒரு சிறந்த...

குரங்கு அம்மை பாதிப்பை தடுப்பது எப்படி

உலகமெங்கும் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. இதன் காரணமாக உலகளாவிய பொது சுகாதார நெருக்கடி நிலையை அறிவித்துள்ளது.

ஆசிரியர்

எய்ட்ஸ் நோயும், பாதுகாக்கும் முறைகளும்…!

எச்.ஐ.வி தொற்று கிருமிகள் உள்ளவர்களுடன் பாதுகாப்பற்ற முறையில் உடல் உறவு கொண்டால் அவர்களுக்கு எய்ட்ஸ் நோய் தொற்றி விடுகிறது. 80 சதவீதம் பேருக்கு எய்ட்ஸ் நோய் வர இதுவே காரணமாகும். 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்தான் எய்ட்ஸ் நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு காரணம் அந்த வயதில் பாலுறவில் அதிக நாட்டமிக்கவராக இருப்பதால், பாதுகாப்பான உடல் உறவை மறந்து விடுகின்றனர். எச்.ஐ.வி கிருமி உள்ள பெண்களுடன் ஆணுறை இல்லாமல் உடலுறவு கொள்வதன் மூலமும்.எச்.ஐ.வி பரிசோதனை செய்யாத ரத்தத்தை செலுத்துவதன் மூலமும் எச்.ஐ.வி தொற்று உள்ளவர்கள் பயன்படுத்திய சுத்திகரிக்கப்படாத ஊசி, கத்தி, பிளேடு மற்றும் பிற ரத்தத்தோடு தொடர்பு உள்ள உபகரணங்களை பயன்படுத்துதல் மூலமும் இந்த நோய் ஏற்படுகிறது.

எச்.ஐ.வி தொற்று கொண்ட கர்ப்பிணிப் பெண்ணிடம் இருந்து அவளுக்கு பிறக்கும் குழந்தைக்கும் இந்நோய் வரலாம். ஒரு நாடு, சமூகம், குடும்பம், தனிமனிதன் என எல்லா நிலைகளிலும் தற்காப்பு என்பது ஒரு அத்தியாவசியமான தேவையாகும். அந்த தற்காப்பிற்கு பாதுகாப்புப்படை என்பது நாட்டிற்கு எவ்வளவு அவசியமோ அதே போல உயிரினங்களுக்கும் நோயை எதிர்க்கும் ஆற்றல் தரும் அணுக்களின் படை மிக மிக அவசியமாகிறது. நல்வாழ்வுக்கும், நோயுறு நிலைக்கும் இடையறாத போராட்டமே உயிர் வாழ்க்கை. எய்ட்ஸ் கிருமியின் அணுகுமுறை சாதாரண நோய்க் கிருமிகளிலிருந்து மாறுபடுகிறது,

அந்த வைரஸ் நேரடியாக தற்காப்பு வெள்ளை அணுக்களின் எண்ணிக்கைப் பெருக்கத்தை தடுத்து நோய் எதிர்ப்பு ஆற்றலை முற்றிலுமாகச் சீர்குலைப்பதுதான் அதன் தீவிரப் பண்பாகும். இது எப்படிஎன்றால் நமது நாட்டை காக்கும் காவலர்களை முற்றிலுமாக அழித்து விட்டால் நிலைமை என்ன ஆகும். மக்கள் பாதுகாப்பை இழந்து விட்ட நிலையில் யார் வேண்டுமானாலும் என்ன தீங்கு வேண்டுமானாலும் செய்து நம்மை அழித்து விடமுடியும். எய்ட்ஸ் கிருமிகள் நமது நோய் எதிர்ப்புச் சக்தியை முற்றிலும் அழித்து விட்ட நிலையில் ஒரு சாதாரணக் காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் கூட நமது உயிரை பலிவாங்கி விடும்.

துரதிர்ஷ்டவசமாக இந்த எய்ட்ஸ் நோயானது மனிதர்களின் சுரப்பு நீர்களின் மூலமும், ஒருவருக்குப் பயன்படுத்திய ஊசியை இன்னொருவருக்குப் பயன்படுத்துவது மூலமும் பரவ வாய்ப்பு இருக்கிறது. சுரப்பு நீர் என்பது நாம் ஏற்கனவே குறிப்பிட்டபடி உடலுறவு கொள்வதன் மூலம் சுரக்கும் நீர்களையும் குறிக்கும். பெரும்பாலான வைரஸ் மற்றும் பாக்டீரியா தொடர்பான நோய்களுக்கு தடுப்பூசி உள்ள நிலையில் இந்த நோய்க்கு அப்படி ஒன்று இல்லாதது ஏன் என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. தடுப்பூசிகள் தயாரிப்பதின் அடிப்படையே நமது தற்காப்புப் படைகளாகிய அணுக்களுக்கு நோய்க்கிருமிகளை அடையாளம் கண்டு அழிக்கும் முறையைக் கற்பிப்பதுதான், ஆனால் இந்த நோயில் நேரடியாகப் பாதிக்கப்படுவது நமது தற்காப்பு படையே என்பதுதான் மிகப்பெரிய சவாலாக உள்ளது.

எச்.ஐ.வி நுண்கிருமியால் உடல் பலமற்றதாகி விட்ட நிலையில் ஏற்படுகின்ற நோய்களின் பிரதிபலிப்பு தான் எய்ட்ஸ் நிலை ஆகும். இந்நோய்கான அறிகுறிகளாக தொடர்ந்து சளி, இருமல், காய்ச்சல் வரும். தொடர்ந்து வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்போக்கு இருக்கும். தோலில் தடிப்பு ஏற்படும். எப்போதும் அசதியாகவும், களைப்பாகவும் இருக்கும்.நாளடைவில் எடை குறைந்து கொண்டே போகும்.தொற்றினை எலிசா என்ற நுட்பமான முதல் நிலை ரத்தச் சோதனை, அதன் ஆண்டிபாடிகளை கண்டறிய பயன்படுகிறது. தொற்றினை உறுதி செய்ய ‘வெஸ்டர்ன் பிளாட்‘ என்ற சோதனை உதவும். இந்த வியாதி வராமல் தடுப்பது எப்படி?

எய்ட்ஸ் நோய் கண்டவருக்குப் பயன்படுத்திய ஊசியை வேறு ஒருவருக்கு பயன்படுத்துவது என்ற வாய்ப்புகள் ஏறக்குறைய ஒழிக்கப்பட்டு விட்டன. ஒருமுறை பயன்பாடு ஊசிகள் ஒரு வரப்பிரசாதமே. அதே நேரத்தில் ஊசிமூலம் போதை மருந்துகள் பயன்படுத்தும் நபர்களுக்கு இதைப்பற்றிச் சிந்திக்க நேரம் இல்லாததால் அவர்கள் எளிதாக இதனைப் பெற்றுக் கொள்கிறார்கள். ரத்ததானம் நடைபெறும் எல்லாக் கட்டங்களிலும் தீவிரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதால் அந்த நிகழ்வுகள் மூலம் எய்ட்ஸ் பரவுவதைத் தடுத்தாகி விட்டது. எஞ்சியுள்ள காரணத்தில் தகாத பாலுறவில் பரவும் முறையே சவாலாக நிற்கிறது. பண்பட்ட ஒரு சமூகத்தில் எல்லோரும் கண்டிக்கக் கூடிய தகாத பாலுறவு, நடைமுறையில் அதிகம் நிலவுகிறது என்ற கசப்பான உண்மையை மறைக்கவோ, மறுக்கவோ முடியாது.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற தனி மனித ஒழுக்கம் பேணப்படுவதன் மூலம் இந்த வியாதியை தவிர்க்கலாம். துணையை மட்டும் நேசி, எய்ட்ஸ் வருமா யோசி. திருமணமாகாதவர்கள், மணம் முடித்தவர்கள் என எல்லோரும் இந்த ஆபத்தை விலைக்கு வாங்கும் நிலையில் உள்ள போது, வள்ளுவர் காலத்திலேயே இது இருந்திருப்பதையும் அதை குறித்துப் பத்து குறட்பாக்கள் எழுதப் பட்டிருப்பதையும் உற்று நோக்க வேண்டும்.

“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்” என்ற குறளை நெஞ்சில் நிறுத்த வேண்டும். திருமணமாகாமல் இருப்பவர்கள் உரிய பருவத்தில் திருமணம் முடிக்கவும், சீரான இல்வாழ்வு தொடங்கவும் முனைய வேண்டும். எய்ட்ஸ் வியாதி எவ்வாறு தொற்றும் என்பதற்கான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி அதற்கான புணர்ச்சி விதிமுறைகளை வகுக்க வேண்டும். பாதுகாப்பான உடல் உறவுகள் மற்றும் நடத்தைகள் விதிமுறைகள் பற்றிப் போதிக்க வேண்டும்.

ஒருவனுக்கு ஒருத்தி என்உயிர் மூச்சை உள்ளடக்கி, அரண் எனப்பட்டதே இல் வாழ்க்கை என்று வாழ்ந்தால் எய்ட்ஸ் என்னும் கொடிய அரக்கனை அண்ட விடாது, நோயற்ற நல வாழ்வு வாழலாம்.

மருத்துவர் ஆ.முருகநாதன். திருப்பூர்

இதையும் படிங்க

தினமும் இரவு தூங்கும் முன் 2 பேரிச்சம் பழம் சாப்பிடுங்க

பேரிச்சம் பழத்தில் அதிகளவில் உள்ளன. இச்சத்துக்கள் அனைத்தும் எலும்புகளின் வலிமைக்கு இன்மையாதவை. அதோடு இது எலும்புகள் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கிறது. பேரிச்சம் பழத்தை...

சிறுநீரை அடக்குவதால் ஏற்படும் ஆபத்துக்கள்

சிறுநீர்.. பொதுவாக நம்மில் பலர் அடிக்கடி செய்யும் தவறுகளில் ஒன்று தான் சிறுநீரை அடக்குவது. நீண்ட நேரம் சிறுநீர்...

உணவில் தினமும் ரசம் சேர்த்து கொள்வதால் நடக்கும் அற்புதங்கள்

நாம் உண்ணும் உணவில் ரசம் சேர்த்து கொள்வது சுவையை மட்டும் தராது கூடவே உடலுக்கு ஏராளமான சத்துக்களையும் தருகிறது என்பது தெரியுமா? புளிரசம்,...

முடக்கத்தானின் மருத்துவ குணங்கள்

முடக்கத்­தான் ஒரு கொடி வகையைச் சேர்ந்த மருத்துவ மூலிகை கீரையா­கும். இது வேலியோரம் படர்ந்து வளரும் ஒரு கொடியினத்தை சேர்ந்தது.

கால் விரல் நகம் சொத்தை வருவதற்கான காரணம்

கால் விரல் நகம் சொத்தை விழுவதன் முதல் காரணம், அதிக நேரம் காலணிகள் அணிந்து கொண்டு வேலை பார்ப்பது.

பல்வேறு நோயை தீர்க்கும் தேன் லவங்க பொடி கலவை

தேன் உலக மக்களுக்கு இறைவனால் அளிக்கப்பட்ட அமிர்தம் என்றாலும் மறுப்பதற்கில்லை. உலகில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் அரசன், தேன்...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

ஆகஸ்ட் 18 வெளியாகும் திருச்சிற்றம்பலம்

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தில் நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ்,...

யாழ்.நகரில் நாயை அடித்துக் கொன்ற இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் நாயொன்றை கொடூரமான முறையில் கொலை செய்து, அந்தக்காணொளிைய சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர்களில், இருவர்,வியாழக்கிழமை கைதாகினர்.இச்சம்பவத்து டன் தொடர்புடைய ஏனையவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கணிசமாக குறைவு | நளின் பெர்னாண்டோ

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 20 முதல் 25% வரை குறைவடைந்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு திறந்த கணக்குகள்...

மேலும் பதிவுகள்

வீட்டில் கவனிக்க வேண்டியவை

பொதுவாக உணவு அருந்தும் பொழுது தரையில் அமர்ந்து சம்மணம் போட்டுக் கொண்டு சாப்பிட வேண்டும். படுக்கையிலோ, நாற்காலியிலோ அமர்ந்து சாப்பிடுவதால் உணவின் மூலம் கிடைக்கக்கூடிய...

வழக்கத்தை விட வேகமாகச் சுற்றும் பூமி

பூமி வழக்கத்தை விட வேகமாகச் சுற்றுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அண்மையில் மிகக் குறுகிய நாளும் பதிவாகியுள்ளது. கடந்த ஜூன் 29ஆம் திகதி சராசரி தினத்தைவிட 1.59 மில்லியன் நாடி குறைவாய்...

எசல பெரஹராவின் தேன் பூஜை

கண்டியின் வரலாற்றுச் சிறப்புமிக்க எசல பெரஹராவின் முதலாவது ரந்தோலி பெரஹரா தினம் சம்பிரதாயபூர்வ தேன் காணிக்கை (தேன் பூஜை) தம்பானே ஆதிவாசிகளால் மேற்கொள்ளக்கொள்ளப்பட்டது. வரலாற்று சிறப்பு...

சீன எல்லைக்கு அருகாமையில் யுத்தப் பயிற்சி

எதிர்வரும் ஒக்டோபர் 18 முதல் 31 வரையில் உத்தர்காண்டில் இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டு யுத்தப் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளன. 'யுத்தபியாஸ்' என அழைக்கப்படும் இந்த யுத்தப் பயிற்சி...

ஆகஸ்ட் 18 வெளியாகும் திருச்சிற்றம்பலம்

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தில் நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ்,...

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

உடுகம்பொல – கெஹெல்பத்தர பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று முற்பகல் 10.20 அளவில்  மோட்டார் சைக்கிளில் பயணித்த துப்பாக்கிதாரி, துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளார்.

பிந்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

மேஷம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உறவினர் நண்பர் வருகையால் உற்சாகம் அடைவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் புது...

3 மாதங்களின் பின் நிலையான பாதுகாப்பு தரக்கூடிய நாடொன்றுக்கு கோட்டாபய செல்வார் | தாய்லாந்து பிரதமர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 3 மாதங்களின் பின்னர் நிலையான பாதுகாப்பு தரக்கூடிய நாடொன்றுக்குச் செல்வார் என்று தான் நம்புவதாக தாய்லாந்து பிரதமர் சேன் - ஓ -...

கொரோனா தொற்று காரணமாக மேலும் 2 பேர் உயிரிழப்பு

நாட்டில் நேற்று (10.08.2022) கொரோனா தொற்று காரணமாக மேலும் 02 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில்...

சிங்கப்பூரிலிருந்து வெளியேறினார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரிலிருந்து வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  சுற்றுலா விஸாவில் தங்கியிருந்த கோட்டாபய ராஜபக்ஸவின்...

ஆர்யாவின் ‘கேப்டன்’ திரைப்பட வெளியீட்டு திகதி அறிவிப்பு

நடிகர் ஆர்யா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'கேப்டன்' எனும் தமிழ் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கொழும்பை வந்தடையும் மற்றுமொரு பெட்ரோல் கப்பல் | அமைச்சர் தகவல்

35,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் ஏற்றிய கப்பல் ஒன்று இன்று (11) இரவு கொழும்புக்கு வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

துயர் பகிர்வு