உடல் சூட்டைத் தணிக்கும் இயற்கையான வீட்டுக் குறிப்புகள்

உடல் அதிகமாக சூடாகிவிட்டால் சில உபாதைகளை சந்திக்க நேரிடலாம். அதைத் தடுப்பதற்கான வழிகள்..

உடல் அதிகமாக சூடாகிவிட்டால் சில உபாதைகளை சந்திக்க நேரிடம். உதாரணமாக சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், சூடு கட்டி, சளி போன்ற பிரச்னைகளை சந்திக்கலாம். அவ்வாறு இருக்கும்போது உடல் சூட்டை தணிக்க மற்ற பிரச்னைகள் தானாக மறைந்துவிடும். அவை என்னென்ன பார்க்கலாம்.

குளிர்மை என்றாலே இளநீருக்குத் தான் முதலிடம். இது உடல்சூட்டைத் தணித்து குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும்.

தர்ப்பூசணி 90 வீதம் தண்ணீர் நிறைந்த பழம் என்பதால் உடல் நீர்ச்சத்து வற்றுவதைத் தடுத்து குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும். ஆண்டி அக்ஸிடண்ட் நிறைந்தது. அதோடு எலக்ரோலைட்ஸ் கொண்டது. கல்லீரல், சிறுநீரகத்திற்கு நல்லது.

உடல் வெப்பத்தால் ஏற்படும் தொண்டை வறட்சிக்கு வெள்ளரி நல்லது.

சிறு பருப்பும் உடல் சூட்டைத் தணிக்கும். செரிமானத்தை சீராக்க உதவும்.

எலுமிச்சையும் உடல் சூட்டைத் தணிக்க உதவும் சிறந்த பழம்.

மோர் உடல் குளிர்ச்சிக்கு உதவக் கூடிய சிறந்த பாணம்.

உணவில் நெய் சேர்த்துக் கொள்வதும் அல்லது அப்படியே ஒரு ஸ்பூன் சாப்பிடுவதும்உடலுக்குக் குளிர்ச்சி தரும். அவ்வாறு சாப்பிடும் போது உடனே குளிர்ச்சி மிகுந்த ஐஸ் கிறீம், ஐஸ் வாட்டர் என ஃபிரிட்ஜ்ஜில் வைத்த பொருட்களை சாப்பிடக் கூடாது.

கருப்பட்டி வெல்லம் உடல் சூட்டைப் போக்குவது மட்டுமன்றி செரிமானத்திற்கும் உதவக் கூடியது. இதைத் தண்ணீரில் கலந்து பருகலாம் அல்லது பாலில் கலந்து குடிக்கலாம்.

உடல்சூடு என்றாலே உடனே அருந்தும் நீரில் கொஞ்சம் வெந்தயம் சேர்த்து ஊற வைத்துக் குடிக்கலாம். இதுவே சிறந்த எளிய வழி.

உடலுக்குப் புத்துணர்ச்சி அளிக்கக் கூடியது புதினா. இது உடல் வெப்பத்தைக் குறைக்கவும் உதவும்.

பெரிய நெல்லிக்காயும் சூட்டைத் தணிக்க உதவும்.

கற்றாழை சதையை மோரில் கரைத்துக் குதெ்தாலும் உடல் சூடு தணியும்.

ஆசிரியர்