மானை அடித்துக் கொன்ற கரடி: கனடாவில் சம்பவம்மானை அடித்துக் கொன்ற கரடி: கனடாவில் சம்பவம்

வனவிலங்கு பூங்காவுக்குள் கரடி ஒன்று மானை அடித்துக் கொன்ற சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

கனடாவின் மோன்க்டோன் வனவிலங்கு பூங்காவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து இயற்கை வளங்கள் துறையின் மேலாளர் கூறுகையில், இது ஒரு துரதிஷ்டவசமான சம்பவம்.

எனது 24 ஆண்டுகால பணியில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததில்லை.

இனிமேல் பூங்காவில் உள்ள மற்ற விலங்குகள், பார்வையாளர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கரடி எவ்வாறு நுழைந்தது என்பது குறித்து ஊழியர்கள் ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கரடி தாக்கப்பட்ட மான்Reeves muntjac tifia Nru வகையை சேர்ந்த மானையை கரடி கொன்றுள்ளது.

தென் கிழக்கு சீனா மற்றும் தைவான் போன்ற நாடுகளில் வாழும் இந்த வகை மான்கள், 17 ஆண்டுகள் வாழும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்