இந்திய பிரதமரின் முடிவு இன்னும் சில தினங்களில்இந்திய பிரதமரின் முடிவு இன்னும் சில தினங்களில்

பொதுநலவாயத் தலைவர்களின் மகாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பான இறுதித் தீர்மானத்தை இன்னும் சிலதினங்களில் இந்தியப் பிரதமர் வெளியிடுவார் எனத் தெரியவருகின்றது. அதே வேளை பல தமிழ் நாட்டின் அமைப்புக்கள் இந்தியப் பிரதமர் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என பெரும் ஆர்ப்பாட்டங்களை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி, அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் தமிழகமெங்கும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், ம.திமு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில தொழிற்சங்கத் தலைவர் கோ.வி.சிவராமன், திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தமிழ்நாடு மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் செல்வி, தந்தை பெரியார் திராவிடர் கழக வழக்கறிஞர் அமர்நாத், தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவர் இரா.அதியமான், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, சேவ் தமிழ்ஸ் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் பங்கேற்கின்றார்கள். தோழர் தியாகுவின் உணவு மறுப்பு போராட்டம் தமிழகமெங்கும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளமையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

ஆசிரியர்