மாப்பிள்ளைக்கு தாலி கட்டிய மணப்பெண்மாப்பிள்ளைக்கு தாலி கட்டிய மணப்பெண்

sdதமிழ்நாட்டில் முதன் முறையாக மாப்பிள்ளைக்கு தாலி கட்டிய ஓர் புதிய சடங்கினை அறிமுகம் செய்து வைத்துள்ளார் மணப்பெண். இலக்கியக் குடும்பமாக திகழும் மணப்பெண் குடும்பத்தினர் அத்திருமண மண்டபத்தினை ஓர் நூலக அலுமாரி போல அமைத்துள்ளனர்.

தாலி கட்டும் வேளையில் அம்மணப்பெண்ணின் சிறியதந்தையான தமிழ்ச்செல்வன் ஆணும் பெண்ணும் சமன், ஆணுக்குப் பெண் அடிமையில்லை ஆகையால் மணப்பெண் மணமகனுக்கு தாலி கட்டுவார் என அறிவித்தார். மணமகன் பிரோம் மணமகள் சிந்துவுக்குத் தாலி கட்டியதும், சிந்து, பிரேமுக்கு செயினை கட்டினார்.

 

அதனைத் தொடர்ந்து நிகழ்ந்தவையும் பழைய சடங்குகளை உடைத்தெறிந்து ஓர் புதிய சடங்கை உருவாக்கும் அடிப்படையில் நிகழ்ந்தேறியது. இவர்களின் திருமணம் ஓர் சாதிமறுப்பு திருமணமாகும்.

 

ஆசிரியர்