5 கால் மாட்டின் 5 ஆவது காலை தொடும் பெண்களுக்கு ஆண்குழந்தைகள் பிறக்கும் அதிசயம்5 கால் மாட்டின் 5 ஆவது காலை தொடும் பெண்களுக்கு ஆண்குழந்தைகள் பிறக்கும் அதிசயம்

ஆண் குழந்தைகள் பிறக்க இன்று பல்வேறு வழிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் 5 கால்களைக் கொண்ட மாட்டின் 5 ஆவது காலினைத் தொடும் பெண்களுக்கு ஆண் குழந்தைகள் பிறக்கும் அதிசயம் இந்தியாவில் நிகழ்கின்றது.

இந்தியாவின் ராய்பரிலுள்ள 3 வயதான ஆண் கன்றுக்குட்டி ஒன்றுக்கு 5 கால்கள் உள்ளன. இம்மாட்டின் ஐந்தாவது காலைத் தொடும் பெண்களுக்கு ஆண் குழந்தை பிறக்கின்றது.

ராஜ் பிரதாப் என்பவருக்குச் சொந்தமான இந்த கன்று ராஜூ என அழைக்கப்படுகின்றது.

நான்கு பெண் பிள்ளைகளின் தாய் ஒருவர் தனது அடுத்த குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்க வேண்டி ராஜூவின் ஐந்தாவது காலினைத் தொட்டு வேண்டியுள்ளார். பின்னர் கடந்த பெப்ரவரி மாதம் குறித்த பெண்ணுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. அப்பிரதேசத்தில் இந்த ஐந்து கால் மாடு பிரபல்யமடைந்துள்ளது.

இச்செய்தி பரவியதைத் தொடர்ந்து சுமார் 30 கர்ப்பிணிப் பெண்கள் இம்மாட்டின் காலினைத் தொட்டு வணங்குவதற்கு 500 ரூபா வரையில் பிரதாப்பிற்கு கட்டணம் செலுத்தியுள்ளனர். அதிசயமாக அனைவருக்கும் ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. அவ்வாறு ஆண் குழந்தை பிறக்காதவிடத்து பணத்தினைத் திருப்பிச் செலுத்துவதாக கூறி வருகின்றார் ராஜ் பிரதாப்.

5 legs cow 2

 

ஆசிரியர்