April 2, 2023 3:07 am

பரந்தன் இந்து மகாவித்தியாலயத்தில் கால்கோள் விழா (படங்கள் இணைப்பு)பரந்தன் இந்து மகாவித்தியாலயத்தில் கால்கோள் விழா (படங்கள் இணைப்பு)

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

வருட ஆரம்பத்தில் கல்வி ஆண்டு ஆரம்பிப்பதையிட்டு நாடுதழுவிய ரீதியில் கால்கோள் விழா நடைபெறுவது வழக்கம். இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன் இந்து மகாவித்தியாலயத்தில் இவ் விழா சிறப்பாக நடைபெற்றது.

முதலாம் ஆண்டு மாணவர்களை இரண்டாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்கும் முகமாக இவ் விழா நடைபெறுகின்றது. குமரபுரம் முருகன் ஆலயத்திலிருந்து பாடசாலைவரை ஊர்வலமாக அனைவரையும் அழைத்துச்சென்றதுடன் புதிதாக பாடசாலையில் சேர்ந்த மானவர்களுக்கு பரிசில்களும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

பாடசாலையின் பிரதி அதிபர் திருமதி மகேந்திரராஜா தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில் கிளிநொச்சி வலைய உதவி கல்விப் பணிப்பாளர் திரு ஸ்ரீ குமரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக அதே பாடசாலையின் ஓய்வுபெற்ற அதிபர் திரு மகாலிங்கம் பத்மநாபன், ஓய்வு பெற்ற ஆரம்ப பாடசாலை அதிபர் திருமதி சிவராஜசிங்கம் மற்றும் பழைய மாணவியும் பரந்தன் மக்கள் வங்கி உத்தியோகத்தருமான திருமதி அகிலா மகான் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

p2

p3

p4

p5

p6

p7

p8

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்