கைகள் இல்லாததால் கால்களால் சாதனை படைத்துவரும் சிறுமி…கைகள் இல்லாததால் கால்களால் சாதனை படைத்துவரும் சிறுமி…

 

இந்தோனேஷியாவைச் சேர்ந்த 11 வயது சிறுமியொருத்தி இரண்டு கைகளும் இல்லாத நிலையில், கால்களை பயன்படுத்தி சாதனைகளைப் படைத்து வருகிறாள். திரி ஆயினா என்ற இச்சிறுமி கைகள் இல்லாமல் பிறந்தவள். ஆனால் ஏனைய மனிதர்கள் கைகளால் செய்யும் வேலைகளை கால்களால் சிறப்பாக செய்துகொள்கிறார் ஆயினா….

தான் ஒரு பொப்பிசை நட்சத்திரமாக வேண்டுமென இச்சிறுமி விரும்புகிறாள். அதற்காக கீ போர்ட் இசைக்கருவியையும் கால்களாலேயே வாசிக்கப் பழகிக் கொண்டுள்ளாள் இச்சிறுமி. தனது தாயார் மற்றும் இரு சகோதரர்களுடன் இச்சிறுமி வசிக்கிறாள். பாடசாலைக்குச் செல்லும் இச்சிறுமி, கால்களால் கட்டுரைகளை எழுதுவதுடன் , படங்களையும் வரைகிறாள். வீட்டில் கால்களாலேயே சமையலுக்கும் உதவி புரிகிறாள். கால்களாலேயே இவள் மரக்கறிவெட்டுகிறாள், பாத்திரங்களை கழுவுகிறாள். கையடக்கத் தொலைப்பேசியில் பேசி தனது கடமைகளை முடிப்பதோடு தனது வேலைகளை தானே செய்துகொள்கிறார்.

rg

ஆசிரியர்